பெண்களை மையமாக ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகம். அதிலும் வித்யா பாலன், டாப்ஸி, என பெண்களை மையமாக வைத்து இயக்கப்படும் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களுக்குத் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. 2021-2022ல் மட்டும் பெண்களை மையமாக வைத்து உருவாகும் படங்களில் பெரிய பட்டியலே காத்திருக்கிறது.
இதில் டாப்ஸி நடிப்பில் இரண்டு படங்களும் அலியா பட் நடிப்பில் இரண்டு படங்களும் முக்கியமாக கவனத்தை ஈர்க்கின்றன.
ராஷ்மி ராக்கெட்
டாப்ஸி நடிப்பில் ஆகர்ஷ் குராணா இயக்கத்தில் ஜீ5 ஓடிடி தளத்தில் அக்டோபர் 15 அன்று வெளியாகி இருக்கும் படம் ’ராஷ்மி ராக்கெட்’. ரசிகர்களின் பெருவாரியான வரவேற்பை இந்தப் படம் பெற்றுள்ளது.ஓட்டப்பந்தய வீராங்கனைக்கு பாலியல் பரிசோதனை செய்வது தொடர்பான அரசியலை இந்தப் படம் பேசுகிறது.
கங்குபாய் கத்தியாவாடி
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் அலியா பட் நடித்து வெளியாக இருக்கும் படம் கங்குபாய் கத்தியாவாடி. மும்பையின் பெண் தாதாக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.6 ஜனவரி 2022ல் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஜீ லே சரா
பிரியங்கா சோப்ரா, அலியா பட், கத்ரினா கைஃப் நடிப்பில் பர்ஹான் அக்தர் இயக்கி உருவாகி வரும் படம் ஜீ லே சரா. சூப்பர்ஹிட் படமான ’ தில் சாஹ்தா ஹை’ படத்தைப் போலவே இந்தப் படம் உருவாகி வருவதாக படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.
சபாஷ் மித்து
கிரிக்கெட் வீரர் மித்தாலி ராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான படம் ‘சபாஷ் மித்து’. டாப்ஸி மித்தாலி ராஜாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். பிப்ரவரி 2021ல் இந்தப் படம் வெளியானது. ஸ்ரீஜித் முகர்ஜி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
டார்லிங்ஸ்
அலியா பட் மற்றும் ஷெபாலி ஷா நடிப்பில் உருவாகி வரும் படம் டார்லிங்க்ஸ். அலியாவின் முதல் தயாரிப்பு இந்தப் படம். மும்பையின் நடுத்தர வகுப்புக் குடும்பத்தின் தாய்-மகள் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தக் கதை உருவாகியுள்ளது.