நமக்குத் தெரியாத தொலைபேசி எண்களிடம் இருந்து வரும் தேவையில்லாத ஃபோன் கால்கள், டெலிமார்க்கெட்டிங், `லோன் வேண்டுமா?’, `கிரெடிட் கார்ட் வேண்டுமா?’, `எங்களிடம் இந்த ஆஃபர் இருக்கிறது’, `உங்களுக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது’ போன்ற ஃபோன் கால்கள் ஆகியவற்றால் மிகவும் சோர்ந்து போயிருப்பவரா நீங்கள்? அப்படியென்றால் இதுபோன்ற எண்களை ப்ளாக் செய்து, அவற்றில் இருந்து தப்பிப்பது மட்டுமே உங்கள் முன் இருக்கும் சுலபமான வழி. மேலும், ஒவ்வொரு ஸ்மார்ட்ஃபோனிலும் இதற்கான வழி உண்டு. 


மேலும் தொடர்ந்து உங்களுக்கு இதுபோன்ற பல ஃபோன் கால்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்குமாயின், அவற்றில் ஒவ்வொன்றையும் ப்ளாக் செய்வது உங்களுக்கு மிகப் பெரிய தலைவலியாக மாறலாம். மேலும் ஒவ்வொரு எண்ணையும் ப்ளாக் செய்துகொண்டே இருப்பது சாத்தியமற்ற செயல். 



`ட்ராய்’ என்று அழைக்கப்படும் இந்தியத் தொலைதொடர்புக் கட்டுப்பாட்டு ஆணையம் இந்தியாவின் செயல்படும் அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களிடமும் `Do not DIsturb (DND)' என்ற அம்சத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குமாறு கட்டாயம் ஆக்கியுள்ளது. இதன் மூலம், இந்தியா முழுவதும் உள்ள தொலைதொடர்பு வசதிகளைப் பயன்படுத்து வாடிக்கையாளர்கள் விளம்பரம், டெலிமார்க்கெட்டிங் முதலான ஃபோன் கால்களை நிரந்தரமாக ப்ளாக் செய்துகொள்ள முடியும்.  


உங்கள் ஃபோன் நம்பரில் இந்த DND வசதியை ஆக்டிவேட் செய்ய வேண்டும் என எண்ணுகிறீர்களா? அப்படியென்றால் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.


இந்த வசதியை ஆக்டிவேட் செய்வதற்கு முன்பு, அதனை எஸ்.எம்.எஸ் மூலமாகவும், ஃபோன் கால் மூலமாகவும் செய்யலாம் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இங்கு இந்த இரு வழிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த DND வசதியை ஆக்டிவேட் செய்யும் வழிமுறைகளை ஆக்டிவேட் செய்ய, ட்ராய் நிறுவனம் எளிதான வழிமுறைகளையே வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அதனால் நீங்கள் எந்த தொலைதொடர்பு நிறுவனத்தின் சிம் கார்டைப் பயன்படுத்தினாலும், DND வசதியை ஆக்டிவேட் செய்யும் வழிமுறை என்பது ஒன்று தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 


இதற்குத் தேவையானவை என்ன? 


1. ஏதேனும் நெட்வோர்க்கில் பதிசெய்யப்பட்டு, ஆக்டிவாகச் செயல்படும் சிம் கார்ட்
2. எஸ்.எம்.எஸ் வசதி 


DND வசதியை ஆக்டிவேட் செய்யும் வழிமுறைகள்: 



வழிமுறை 1: எஸ்.எம்.எஸ் மூலம் ஆக்டிவேட் செய்வது:


1. உங்கள் ஃபோனில் உள்ள மெசேஜ் ஆப்பிற்குச் செல்லவும்.
2. புதிதாக மெசேஜ் ஒன்றை உருவாக்கி, அதில் `START 0' என்று டைப் செய்ய வேண்டும். அனைத்து எழுத்துகளும் ஆங்கிலத்தின் capital letterகளாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
3. இந்த மெசேஜை 1909 என்ற எண்ணுக்கு அனுப்பவும். 


வழிமுறை 2: ஃபோன் கால் மூலமாக ஆக்டிவேட் செய்வது:


1. உங்கள் ஃபோனின் டயலருக்குச் செல்லவும்.
2. 1909 என்ற எண்ணுக்கு டயல் செய்து, அதன் வழிமுறைகளைப் பின்பற்றி DND வசதியை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.