பட்டா, சிட்டா ஆன்லைன்: தமிழ்நாட்டில் பட்டா சிட்டா ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?


பட்டா என்பது ஒரு நிலத்துக்காக வருவாய்த் துறை வழங்கும் பதிவு ஆவணம் ஆகும். சிட்டா என்பது சொத்து அமைந்துள்ள பகுதி,  அளவு, உரிமையாளர் முதலான விவரங்களை உள்ளடக்கிய ஆவணம் ஆகும். கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து இந்த இரு  ஆவணங்களும் இணைக்கப்பட்டு, பட்டா சார்ந்த தகவல்கள் அனைத்தும் ஓரே ஆவணத்தில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.  குடிமக்கள் தங்களது சிட்டா பட்டா, அடங்கல் சான்றிதழ்களை இப்போது ஆன்லைன் மூலமாகவும் பார்க்க முடியும்.


தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் இருந்து பட்டா சிட்டா நில சர்வே விவரங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள்


Step 1:


பட்டா சிட்டா ஆன்லைன் பெற வேண்டிய அரசின் அதிகாரபூர்வ வலைதளம்  https://eservices.tn.gov.in/eservicesnew/index.html


Step 2:


பட்டா & புலப்படம் / சிட்டா / நகர நில அளவைப் பதிவேடு விவரங்களை பார்வையிடுவதற்கான ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.



 


Step 3: இப்போது தோன்றும் பக்கத்தில் கீழ்கண்ட தேர்வுகளை பூர்த்திசெய்யவும் .


அதில் 1) மாவட்டம், 2) வட்டம் ,  3) கிராமம் 4) பட்டா /சிட்டா விவரங்களை பார்வையிட 5) அங்கீகார மதிப்பை உள்ளிடவும்,    6) செல்போன் நம்பர் பதிவு செய்யவேண்டும், பின்னர் அதற்க்கு ஒடிபி OTP வரும், அதனை உறுதிப்படுத்த வேண்டும், இவை அனைத்தயும் பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். 




Step 4: பின்னர் உங்களது உள்ளீடு தரவுகள் இயக்கப்பட்டு அதற்கான சிட்டா தோன்றும். சிட்டா சான்றினை சரி பார்த்தபின்னர் அதன் கீழ் உள்ள "Print" பொத்தானை அழுத்தவும். இப்பொழுது சிட்டவை PDF தரவாக சேமிக்கலாம் அல்லது அச்சிட்டு கொள்ளலாம்.