குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமான சிம் கார்டுகள் உங்கள் பெயரில் இருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க இந்திய தொலைத் தொடர்புத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
செல்போன்களின் தொடக்கக் காலங்களில் செல்போனை விடவும் சிம் கார்டுகளின் விலை அதிகமாக இருந்தது நினைவிருக்கலாம். இன்கம்மிங், அவுட்கோயிங் என இரண்டுக்குமே பயனாளர்கள் பணம் கொடுக்க வேண்டி இருந்தது. பின்னாட்களில் அதிகரித்த நெட்வொர்க் நிறுவனங்களால் போட்டி உலகமாக மாறி ஆஃபர்களை அள்ளி வீசத் தொடங்கின. பலபல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வந்து காணாமலும் போனது. பிறகு சிம் கார்டுகளை அந்தந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவசமாக கொடுக்கத் தொடங்கின. வீதிக்கு வீதி இலவசமாக சிம் கார்டுகள் கொடுக்கப்பட்டன. இலவசம் என்பது அடுத்தக்கட்டத்துக்கு போனது. டாக்டைம் கொடுக்கப்பட்டு இலவச சிம் கார்டுகள் கொடுக்கப்பட்டன. தேவையோ? இல்லையோ? பலரும் சிம் கார்டுகளை வாங்கி குவித்தனர். ஆனால் அவை அனைத்தும் பயன்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் ஒரே பெயரில் பல சிம்கார்டுகள் இருப்பதை கட்டுப்படுத்த இந்திய தொலைத் தொடர்புத்துறை நடவடிக்கை எடுக்கவுள்ளது.
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
எத்தனை சிம்கார்டுகள்?
மத்திய அரசின் உத்தரவின்படி, ஒரு தனி நபர் அவருக்கான அடையாள அட்டையின்படி 9 சிம்கார்டுகளை வைத்துக் கொள்ள முடியும். அதற்கு மேல் வைத்திருக்க அனுமதி இல்லை. ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு, அசாம் மாநிலத்தின் சில பகுதிகளில் ஒருவர் 6 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது.
9 சிம்கார்டுகளுக்கு மேல் இருந்தால் அதன் ஆவணங்கள் மீண்டும் சரிபார்க்கப்படும். சரியான ஆவணங்கள் இல்லை என்றாலும், சிம் கார்டுகளின் பயன்பாடு தொடர்ந்து இல்லாமல் இருந்தாலும் குறிப்பிட்ட சிம் கார்டுகள் தடை செய்யப்படும் . அதுமாதிரியான சிம்கார்டுகளை இடைநிறுத்தம் செய்ய தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சைபர் கிரைம் மோசடிகள், ஸ்பேம் அழைப்புகள், தொல்லை தரும் கோரிக்கைகள் என பல்வேறு பிரச்னைகளை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்