டிஜிட்டல் உலகில் நாம் பயன்படுத்தும் மொபைல்போன்கள் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. புகைப்படங்களை கிளிக் செய்வதிலிருந்து ஆன்லைன் பணம் செலுத்துவது வரை அனைத்தும் ஒரு நொடியில் மொபைல் போன்கள் மூலம் செய்து விடுகிறோம். அதிகரித்து வரும் இணையப் பயன்பாடு காரணமாக, போன் ஹேக்கிங் சம்பவங்களும் வேகமாக அதிகரித்து வருகின்றன.
ஹேக்கர்கள் போனை ஹேக் செய்ய பல்வேறு வழிகளை கொண்டு வருகிறார்கள். இவ்வாறான நிலையில் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய தேவை மிக அவசியம். இப்படியான நிலையில் உங்கள் போன் ஹேன் செய்யப்பட்டதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது..? இதற்கு எல்லாம் பதில்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. கணினியை விட ஹேக்கர்கள் போனை ஹேக் செய்வது எளிது. உங்கள் போன் சிஸ்டம் ஷட் டவுன் மற்றும் ரீஸ்டார்ட், போன் ஹேங் ஆகுதல், பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போவது போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டால், உங்கள் ஃபோன் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம். இந்தச் செய்தியில் உங்களுக்குச் சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை கண்டு கொள்ளுங்கள்.
உங்கள் போன் விரைவாக சார்ஜில் இருந்து குறைந்தால், ஒருவேளை உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் சில சமயங்களில் பின்னணியில் இருந்து அவர்கள் நம் போனை பயன்படுத்தும்போது பேட்டரி விரைவாக சார்ஜில் இருந்து குறையும். இதன் காரணமாக பாதுகாப்பாக இருப்பது நல்லது.
தேவை இல்லாத அப்ளிகேஷன்களை நீக்கலாம்:
நீங்கள் ஆன்ராய்டு அல்லது ஐபோனை பயன்படுத்துகிறீர்களா என்பது முக்கியமல்ல. அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோருக்கு வெளியே ஆப்களை பதிவிறக்குவதற்கு முன்பு நீங்கள் எப்போதும் இருமுறை யோசிக்க வேண்டும். உங்கள் மொபைலில் நீங்கள் பயன்படுத்தாத செயலிகள் (ஆப்ஸ்) எதுவும் இருந்தால் உடனடியாக டெலிட் செய்வது நல்லது. உங்கள் அனுமதியின்றி ஒரு சில ஆப்கள் தானாகவே அப்டேட் ஆகி உங்கள் போனில் இடம் பெற்றிருக்கும். அத்தகைய சூழ்நிலையில் அதை உடனடியாக அகற்றுவது மிகவும் முக்கியம். இதுவும் போன் ஹேக்கிங்கிற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
உங்கள் போன் வேகமாக ஹீட் ஆகிறதா..?
உங்கள் போன் விரைவாக வெப்பமடைந்தால், ஹேக்கர்கள் உங்கள் போனை ஒருவேளை ஹேக் செய்திருக்கலாம். ஏதேனும் முறையில் ஜிபிஎஸ் சாதனங்களை உங்கள் போனில் உள்ளே வைத்தோ அல்லது செயலி மூலம் ஹேக் செய்து பயன்படுத்தினாலோ வெப்பம் அடைந்திருக்கும். எனவே, இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ஒரு சில பிரச்சனைகள் தானாக உருவெடுக்கும்..?
போன் ஹேக் செய்யப்பட்டால், அதிகளவில் ஹேங் ஆகுதல், போன் வேலை செய்யாமல் போவது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
போன் பேசும்போது அதிகளவில் இரைச்சல் சத்தம்:
நீங்கள் யாரிடமாவது போனில் பேசிக்கொண்டிருக்கும்போது, ஏதேனும் பின்னணியில் இரைச்சல் கேட்டால், எச்சரிக்கையாக இருக்கவும்.
ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்வது..?
உங்கள் போனை யாரோ ஒருவர் ஹேக் செய்யப்பட்டதாக நீங்கள் நினைத்தால், உடனடியாக நீங்கள் தொழில்நுட்ப நிபுணரை தொடர்புகொண்டு உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணலாம். மேலும், உங்கள் போன் மூலம் உங்களை மீறி பணப் பரிவர்த்தனையோ அல்லது உங்கள் ப்ரைவசி புகைப்படங்கள் வெளியே சென்றாலோ, நீங்கள் சைபர் போலீஸாரிடம் புகார் அளிப்பது நல்லது.