விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரி பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்பு தொடக்கம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


நீச்சல் பயிற்சி வகுப்பு


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விழுப்புரம் மாவட்டம் விளையாட்டுயரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் கற்றுக் கொள்ளும் திட்டம் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்திட தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கில் நீச்சல் பயிற்சி வகுப்பு, முதல் வகுப்பு நிறைவு பெற்றது. இரண்டாம் வகுப்பு நடைபெற்று கொண்டு இருக்கிறது. மூன்றாம் வகுப்பு (3 rd batch 01.05.2024 to 14.05.2024) நான்காம் வகுப்பு (4th batch 16.05.2024 to 29.05.2024) ஐந்தாம் வகுப்பு (5th batch 01.06.2024 to 14.06.2024) ஆகிய பிரிவுகளாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் நடைபெறவுள்ளது.


கட்டணம் 


மேலும் 12 நாட்கள் பயிற்சி அளித்து அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும். 12 நாட்களுக்கு பயிற்சி கட்டணம் ரூபாய் 1770/- ஆகும். பயிற்சி கட்டணத்தினை cridit card, Debit card or UPI மூலம் அலுவலகத்திலே செலுத்தலாம். கட்டணம் செலுத்த வரும் பொழுது ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும். ஒருவருக்கான பயிற்சி நேரம் ஒரு மணி நேரம் ஆகும். நீச்சல் குளம் திங்கள் கிழமை மட்டும் விடுமுறையாகும்.


எனவே மேற்கண்ட வகுப்புகளில் விழுப்புரம் மாவட்டத்தில் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ/ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டு பயன்பெறவும் மற்றும் இது தொடர்பாக இதர விபரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நோரிலோ, அல்லது தொலைபேசியிலோ 9786471821, 9566499010, 7401703485 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு விபரம் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி. பழனி அவர்கள் தொரிவித்துள்ளார்.