பிரபல பைக் நிறுவனமான ஹார்லே டேவிட்சன் தனது ஸ்போர்ட்ஸ்டெர் மாடலில் சில யூனிட்களை திரும்பப்பெற்று வருகின்றது. தொடர்ச்சியாக 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் முகப்பு விளக்கில் பிரச்னை இருந்ததை அடுத்து. அந்த யூனிட்டில் தயாரான சுமார் 30,000க்கும் அதிகமான வாகனங்களை அந்த நிறுவனம் தற்போது திரும்ப பெற்று வருகின்றது. ஹார்லே டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டெர் மாடல் வைத்திருப்போர் அருகில் உள்ள ஹார்லே டேவிட்சன் நிறுவனத்தை அணுகவும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.








மேலும் இந்த குறைபாடு அமெரிக்காவில் விற்பனையான பைக்குகளில் மட்டுமே காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்போர்ட்ஸ்டெர் மாடல் பைக்குகளில் சுமார் 14 மாடல்களில் இந்த ஹெட் லைட் பிரச்சனை இருக்குமென்று சந்தேகிக்கப்படுகின்றது. ஹார்லே டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டெர் Iron 888 மடலின் ஆரம்ப விலை சுமார் 8,999 அமெரிக்க டாலராகும்.   




  
1900களின் தொடக்கத்தில் அமெரிக்காவில் துவங்கப்பட்ட ஹார்லே நிறுவனம் கனரக பைக்குகளை தயாரிக்கும் நிறுவனம் என்பது குறிப்படத்தக்கது. 115 ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் கொண்ட இந்த ஹார்லே டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த 2009ம் ஆண்டு கால்பதித்து குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் ஹரியானாவில் மட்டுமே தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது.