"மறதி" இந்த சொல் சாதாரணமாக இருந்தாலும், இது ஒரு மிகப்பெரிய வியாதி. தங்கமகன் படத்துல கூட தனுஷ் அப்பாவா வற்ற கே.எஸ்.ரவிக்குமார் மறதியால தன் உயிரையே மாய்ச்சிக்குற அளவுக்கு போயிடுவாரு பார்த்திருக்கீங்கதானே!வயசானவங்களுக்குதான் மறதிவரும் அப்படிங்குற காலம் எல்லாம் மாறிப்போச்சுங்க. நவீனமயமாக்கப்பட்ட காலத்துல மறதி பொதுவா ஒன்னுதானே. இப்படியான "மறதி" நோய் இருக்குறவங்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பம்தான் "AIRTAG" . இதை இப்போ ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்காங்க. AIRTAG-ஐ உங்க வீட்டு நாய்க்குட்டி, கார், முக்கியமான ஆவணங்கள் அடங்கிய பை என நீங்கள் அன்றாட வாழ்க்கையில் மறந்துபோற பொருட்கள்ல பொருத்தி வைத்துக்கொள்லலாம். பிறகு இதற்காக கொடுக்கப்பட்டுள்ள "find my app" என்ற செயலி மூலமாக "ஏர் டேகை " இணைத்து பொருட்கள் குறித்து நியாபகப்படுத்துமாறு ஆக்டிவேட் செய்து வைத்துக்கொள்ளலாம். ஆனால் குழந்தைகளோடு "ஏர் டேகை" இணைக்க ஆப்பிள் நிறுவனம் பரிந்துரைக்கவில்லை . இந்த AIRTAG-ஐ மொபைல்ஃபோனுடன் இணைத்தவுடன், பொருட்களை நீங்கள் மறந்துவைத்துவிட்டு தேடும்பொழுது, மொபைல்ஃபோன் மூலம் இது நியாபகப்படுத்தும். இதில் கொடுக்கப்பட்டுள்ள யூ1 சிப் தொழில்நுட்பம் பொருள் வைக்கப்பட்ட திசை, எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை துல்லியமாக தெரியப்படுத்தும். பொருளின் அருகில் நீங்கள் நெருங்கிவிட்டால் "பீப்ப்ப்ப்ப்" என ஒலியெழுப்பும். அதன் மூலம் நீங்கள் எளிமையாக பொருளை கண்டறிந்துவிடலாம். சிரி மற்றும் Find my app-இல் குரல்கட்டளைகள் மூலமாகவும் இதனை பயன்படுத்தமுடியும். உங்களிடன் ஐஃபோன் இருந்தால் மட்டுமே இதனை ப்ளூ டூத் தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். நீங்கள் இந்த ஏர் டேகினை அருகில் வைத்துக்கொண்டு இணைக்கவில்லை என்றாலும் அதுகுறித்த செய்தியை, மொபைல் வாயிலாக தொடந்து உங்களுக்கு தெரிவித்துக்கொண்டிருக்கும். ஏர்டேகினை யாரேனும் திருடுவதற்கு முயற்சி செய்தாலோ அல்லது உங்களை கண்காணிக்க பயன்படுத்தினாலோ அது எச்சரிக்கை ஒலி எழுப்பும் எனவும், ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஏர் டேக் தொலைந்துவிட்டால், வேறு ஒரு ஐபோனில் இருந்து ஸ்கேன் செய்து அதன் உரிமையாளரின் விவரங்களை பெறமுடியும். இதற்கு என்.எஃப்.சி என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பேட்டரியை பொருத்தவரையில் மாற்றி அமைத்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அது குறித்த அறிவிப்பை ஏர்டேக் மொபைல் ஃபோன் வாயிலாக தெரிவிக்கும். மேலும் என்க்ரிப்ஷன் தொழில்நுட்பத்தினை இதில் பயன்படுத்துவதால் உங்கள் தகவல்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Apple Airtag | ஞாபக மறதியா? கவலையவிடுங்க.. எல்லாத்துக்கும் அலர்ட் கொடுக்க Apple Airtag வந்தாச்சு..
ABP NADU | 11 May 2021 05:41 PM (IST)
ஆப்பிள் ஐ-போன் "find my app" என்ற செயலி மூலமாக "ஏர் டேகை " இணைத்து பொருட்கள் குறித்து நியாபகப்படுத்துமாரு ஆக்டிவேட் செய்து கொண்டால்போதும்.
Apple ஏர்டேக்
Published at: 11 May 2021 05:41 PM (IST)