போலி செய்திகள் பரப்பும் ட்விட்டர், ஃபேஸ்புக், யூட்யூப் பக்கங்களை முடக்கும் பணி தீவிரம்
சமூக ஊடக தளங்களில் இருந்து அரசுக்கு எதிரான சர்ச்சைக்குரிய செய்திகளை அகற்றி, அவற்றை குறிப்பிட்டு புகார் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
சமூக வலைதள பயன்பாடு அதிகமானதில் இருந்து, போலியான செய்திகள் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், ட்விட்டர், ஃபேஸ்புக், யூட்யூப் தளங்களில் உள்ள போலி கணக்குகளை முடக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு, மத்திய அரசு சமூக ஊடக தளங்களுக்கு கடுமையான விதிகளை அமல்படுத்தியது. இதன்படி சமூக ஊடக தளங்களில் இருந்து அரசுக்கு எதிரான சர்ச்சைக்குரிய செய்திகளை அகற்றி, அவற்றை குறிப்பிட்டு புகார் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது. இந்நிலையில், போலி கணக்குகள் வைத்து போலி செய்திகளை பரப்பும் அக்கவுண்ட்டுகளை முடக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Just In




பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துகள் அடங்கிய அனிமேட்டட் வீடியோ, இந்து பெண்களுக்கு எதிரான கருத்துகள் கொண்ட வீடியோக்கள் அதிக அளவில் வலம் வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
தகவலின்படி, 73 ட்விட்டர் பக்கங்கள், 3 யூட்யூப் பக்கங்கள், 1 இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டு, அதில் இருந்து பரப்பப்பட்ட போலி செய்திகள் அந்தந்த தளங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலியான செய்திகளை பரப்ப வேண்டாம் எனவும், செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்து மற்றவர்களுடன் பகிர வேண்டும் எனவும் பொது மக்களுக்கு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்