சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் (SLC) சில புதிய விதிமுறைகளை விதித்துள்ளது. இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகக் குழு சார்பில் கடந்த ஜனவரி 7 ம் தேதி  நடைபெற்ற கூட்டத்தில், இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகக் குழு, ஓய்வு பெற்ற மற்றும் தேசிய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்பும் வீரர்கள் தொடர்பாக சில முடிவுகளை எடுத்தது.


புதிய விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறத் திட்டமிடும் வீரர்கள், ஓய்வு பெறுவதற்கான விருப்பத்தை மூன்று மாதங்களுக்கு முன்னதாக நிர்வாகக் குழுவிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தது. 




மேலும், மற்ற நாடுகளில் ஃபிரான்சைஸ் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திடம் இருந்து ‘’நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட்’’ (என்ஓசி) பெற வேண்டும் என்றும், அவர்கள் ஓய்வுபெறும் தேதியிலிருந்து ஆறு மாதங்கள் முடிந்த பின்னரே அதைப் பெறுவார்கள் என்றும் முடிவெடுக்கப்பட்டு அறிவிப்பை வெளியிட்டது. 


தொடர்ந்து, லங்கா பிரீமியர் லீக்கிற்கு முந்தைய சீசன் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் 80% போட்டிகளில் விளையாடி ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டுமே போட்டிக்கு தகுதியானவர்களாக கருதப்படுவார்கள் என்று இலங்கை கிரிக்கெட் (SLC) தெரிவித்துள்ளது.


 






முன்னதாக, இலங்கையின் இடது கை பேட்ஸ்மேன் பானுகா ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். இதற்கான கடிதத்தையும் ராஜபக்சே இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திடம் (எஸ்.எல்.சி) ஒப்படைத்துள்ளார். இலங்கை அணிக்காக இவர்,  சர்வதேச அளவில் ஐந்து ஒரு நாள் மற்றும் 18 T20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். 


சற்று உடல் பருமனுடன் காணப்படும் ராஜபக்சே, உடற்தகுதி காரணமாக தான் ஓய்வு பெறுவதாக விளக்கமளித்தார். ராஜபக்சே திடீர் ஓய்வு அறிவிப்பு காரணமாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் இந்த புதிய விதிமுறைகளை அறிவித்ததாக கூறப்படுகிறது. 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண