தொலைதொடர்பு சேவையில் தற்போது நாம் நான்காம் தலைமுறை தரநிலையை பயன்படுத்தி வருகிறோம், அதாவது 4G தொழில்நுட்பம். தற்போது 4G-இன் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமான 5G தொழில்நுட்பத்தை உலகின் பல்வேறு நாடுகள் பயன்படுத்த தொடங்கியுள்ளன.
இந்நிலையில் உலகின் அதிவிரைவான  தொலைத்தொடர்பு சேவையான 5ஜி சேவையை இந்தியாவில்  சோதனை செய்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.  நாட்டில் தற்போது 4ஜி தொலைத்தொடர்பு சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  5ஜி சேவையை  JIO, AIRTEL, VI , MTNL  உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.


இந்த சோதனை  முயற்சியானது 6 மாதங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  பெரும்பாலும் இது போன்ற சோதனைகள் சென்னை , மும்பை போன்ற பெருநகரங்களில் மட்டுமே செய்யப்படும் . ஆனால் இம்முறை  சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களிலும்  5G சோதனை முயற்சி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் 5G சேவையை பெறுவது உறுதி செய்யப்படும் என அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

5G சேவையை சோதனை செய்வதற்கு  , அந்த வசதி அடங்கிய மொபைல்போன் அவசியமாகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதலே 5G  மொபைல்ஃபோன்களை உருவாக்க மொபைல் நிறுவனங்கள் தொடங்கிவிட்டன. இந்நிலையில் சோதனை  குறித்த ஆவணங்களை மத்திய அரசிடம்  தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அளித்திருந்தன. அதில் AIRTEL, VI  போன்ற நிறுவனங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஹூவாய் மொபைல்போனை பயன்படுத்த போவதாக அறிவித்தன.ஆனால் சில காலங்களில் அந்த மொபைல் போனை பயன்படுத்த போவதில்லை என‌
பின்வாங்கியது.
 

சீன மொபைல்போன்களை 5G சோதனை முயற்சியில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்  பயன்படுத்த  தயக்கம் காட்டுவதில் அரசின் தலையீடு இருப்பதாக கூறப்படுகிறது.எனவே ஜியோ மொபைல், சி-டாட், சாம்சங், சோனி  உள்ளிட்ட மொபைல் போன்களை பயன்படுத்த போவதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் விரைவில் இதற்கான சோதனை முயற்சி தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சோதனையின்போது தொலைதொடர்பு  நிறுவங்கள் சோதனையில் உள்ள ஸ்பெக்ட்ரம் அல்லது முன்னதாக வைத்திருக்க கூடிய ஸ்பெக்ட்ரம்களை பயன்படுத்தலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உலகின் 61 நாடுகள் 5ஜி சேவையை பெற்றிருப்பதாக GSM அமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்தியாவிலும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டால் வருகிற 2022 இல் கிட்டத்தட்ட 130 கோடிக்கும் அதிகமான பயனாளர்களை இந்த சேவை பெற்றிருக்கும் என்றும் அந்த அமைப்பு  தெரிவிக்கிறது.

1ஜி முதல் 4ஜி வரையிலான தலைமுறை மாற்றங்கள் நம் வாழ்வில் ஆகப்பெறும் மாற்றங்களை கொண்டு வந்துவிட்டன. இந்நிலையில் அறிமுகமாகப்போகும் 5ஜி தொழில்நுட்பம்  இன்னும் நினைத்து பார்க்க முடியாத மாற்றங்களை கொடுக்கும் என்கின்றனர் வல்லுநர்கள், குறிப்பாக வெர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆகுமென்ட் ரியாலிட்டி போன்றவற்றில் 5ஜி தொழில்நுட்பத்தின் பங்கு இன்றியமையாதது என கூறப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் திரைப்படங்கள், பொழுதுபோக்கு செயலிகள், விளையாட்டு போன்றவற்றில் 5ஜி பெரும் பங்காற்றிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.