ஸ்மாட்ஃபோன் சந்தையில் உள்ள ஐபோன், ஆண்ட்ராய்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக கூகுள் தனது பிக்சல் மாடல் மொபைல்களை வெளியிட தொடங்கியது.

Continues below advertisement

உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையான இந்தியாவில் தங்கள் பிராண்ட் ஸ்மார்ட்போன்களை உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்வதற்கான லட்சியங்களுடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்திருந்தது. அந்த வகையில், பிக்சல் சீரிஸில் புதிய வகையிலான வசதிகளுடன் ’கூகுள் பிக்சல்-8’ ரக ஸ்மாட்ஃபோன் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடலில் உள்ள வசதிகள் குறித்து தகவல்கல் வெளியாகியுள்ளன.

கூகுள் பிக்சல் ஸ்மாட்ஃபோட் ஐபோனுக்கு அடுத்தப்படியாக, பெரும் வரவேற்ப்பை பெற்றிருக்கும் பிக்சல் சீரிஸின் புதிய மாடல் இந்தாண்டு வெளியாக உள்ளது. இந்நிலையில், கூகுள் பிக்சல் -8 ,மாடலில் உள்ள புதிய வசதிகள், என்னென்ன ஃபீச்சர்ஸ் வழங்கப்பட உள்ளது என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Continues below advertisement

கூகுள் பிக்சல் 7 மற்றும் கூகுள் பிக்சல் 7 ப்ரோ ஆகிய மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபோட்டோ அன்ப்ளர் (Photo Unblur) வசதியோடு, புதிய மாடலில் வீடியோ அன்ப்ளர் (video Unblur) வசதிகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எல்லா வசதிகளும் ஒரே கையடக்க எலக்ட்ரானிக் டிவைஸ் ஸ்மாட்ஃபோனில் வந்த பிறகு, ஃபோட்டோ, வீடியோவிற்கு தனியாக கேமரா ஏதும் பெரிதாக தேவையில்லை என்ற நிலையாகிவிட்டது.தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு பல ஸ்மாட்ஃபோன் தயாரிப்பு நிறுவனங்களும் ஃபோட்டோகிராபி எடிட்டிங்கில் பல்வேறு வகையான எடிட்டிங், ஃபில்டர் வசதிகளை வழங்கி வருகிறது. 

ஃபோட்டோ எடுக்கும்போது ப்ளர் ஆகிவிட்டால் இனி கவலை வேண்டாம். அதை சரிசெய்வதற்காக 'UnBlur' என்ற ஆப்சனை கூகுள் பிக்சல் ஃபோனில் அறிமுகம் செய்தது. கூகுள் பிக்சல் 7, கூகுள் பிக்சல் 7 ப்ரோ உள்ளிட்டவைகளில் ஏற்கனவே ப்ள்ர் போட்டோக்களை சரிசெய்யும் வசதி இருக்கிறது. அதோடு, வீடியோ ப்ளர் ஆனால் சரி செய்ய கூடிய வசதி அறிமுகம் ஆகிறது.

இதோடு ‘Google Pixel 8’ மாடலில் ஆஃப்டர் ஸ்கூல் (After School), ப்ளாக் & வைட்( Black and White), க்ரோமாடிக் (Chromatic), Forward, க்ளாஸி, (Glassy) Golden, Moire, Multiply, Polaroid, Rainbow Rays, Reflect,RGB Pulse, Super 8, VHS உள்ளிட்ட வீடியோ எடிட்டிங் வசதிகளும் அறிமுக செய்யப்பட உள்ளது. கூகுள் பிக்சல் - 8 மாடலில் அறிமுகம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் வாசிக்க.

TN budget 2023: சோழர்களின் பெருமையை பறைசாற்ற தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சிகயகம் - நிதியமைச்சர் அறிவித்த அறிவிப்புகள்!

Senthil Balaji on EPS: டிவி பார்க்காத, மக்கள் மீது அக்கறை இல்லாத நபர்தான் எடப்பாடி பழனிசாமி - செந்தில் பாலாஜி