சர்வதேச அளவில் இணையதளத்தை ஆட்டுப்படைக்கும் நிறுவனம் என்றால் அது கூகுள் தான். உலகத்தில் எந்த ஒரு விஷயத்தையும் தெரிந்து கொள்ள மக்கள் தேடுவதற்காக இருக்கும் ஒரே ஆயுதம் கூகுள் தான். இந்த கூகுள் நிறுவனம் நேற்று முன்தினம் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. இதை அதன் சி இ ஓ சுந்தர் பிச்சை வெளியிட்டு பேசினார். அதுமட்டுமின்றி இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதையும் சுட்டிக்காட்டி இது தொடர்பாக கூகுள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த விழாவில் கூகுளின் முக்கியமான புதிய அம்சமான ஆண்ட்ராய்ட் 12 பீட்டா வெர்ஷன் வெளியிடப்பட்டது. 


தற்போது ஆண்ட்ராய்ட் 11 நடைமுறையில் இருக்கும் நிலையில் பல்வேறு அப்டேட்களை கொண்ட ஆண்ட்ராய்ட் 12ஐ கூகுள் அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இது இப்போதே அனைவருக்கும் கிடைக்காது. ஒரு சோதனையாக பீட்டா வெர்ஷனில் மட்டுமே இந்த ஆண்ட்ராய்ட் 12 அறிமுகமாகும். அதன் வரவேற்பை பொருத்தும், குறைகள் கண்டறியப்பட்டால் சரிசெய்யப்பட்டு இந்த வருடத்தின் இறுதிக்குள் அனைவரின் ஸ்மார்ட்போன்களையும் ஆண்ட்ராய்ட் 12 அலங்கரிக்கும்.


இந்தச் சூழலில் ஆண்ட்ராய்ட் 12 மூலம் கூகுள் கொண்டு வரவுள்ள 5 சிறப்பான அம்சங்கள் என்னென்ன?


தனிநபர்  தகவல் பாதுகாப்பு தொடர்பான டேஸ்போர்டு(Privacy dashboard):




கூகுள் நிறுவனம் எப்போதும் அதன் பயனாளர்களின் தரவுகளின் பாதுகாப்பு தொடர்பாக அதிகம் சிந்தித்து வருகிறது. அந்தவகையில் ஆண்ட்ராய்ட் 12லும் இதற்காக ஒரு புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஒரு பிரைவசி டேஸ்போர்டு என்ற புதிய வசதி இதில் உள்ளது. அதில் எந்தந்த செயலிகள் உங்களின் எந்தந்த தகவல்களை எப்போது சேகரிக்கிறது என்பது தொடர்பாக தெரிந்து கொள்ளலாம். அத்துடன் ஒரு சில செயலிகள் தேவையில்லாமல் உங்களுடைய தகவலை சேகரித்திருந்தால் அதற்கான அனுமதியை நீங்கள் அதிலிருந்து நீக்கலாம் உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும் எந்தந்த செயலிகள் நம்முடைய கேமரா மற்றும் மைக்ரோபோன் ஆகியவற்றை பயன்படுத்துகிறது என்று தெரிந்து கொள்ளவும் இது உதவுகிறது. 


ஒரு கையில் ஸ்கிரீன் பயன்பாடு(onehand mode):




ஐபோனின் முக்கியமான சிறப்பு அம்சம் அதன் ஒரு கை மோட் தான். இதில் ஒரு கையுடன் ஸ்கிரீனை எளிதாக கையாள முடியும். இந்த வசதி இதுவரை ஆண்ட்ராய்ட் போனில் இருந்தாலும் அது சற்று சிரமமாக தான் இருந்தது. இதை வரும் ஆண்ட்ராய்ட் 12 போக்க உள்ளது. அதில் இடம்பெற்றுள்ள ஒரு கை மோட் மிகவும் எளிதாக ஸ்கிரீனை கையாளும் முறையில் அமைந்துள்ளது. 


டபிள் டெப் மோட்(Double tap features):




இதுவும் ஐபோன் இடம்பெற்றுள்ள சிறப்பான அம்சங்களில் ஒன்று. அதாவது ஐபோனை பின்னால் இரண்டு முறை தட்டும் போது சில விஷயங்களை நாம் கட்டுப்படுத்த முடியும். இதை தற்போது கூகுள் தனது ஆண்ட்ராய்ட் 12ல் அறிமுகம் செய்துள்ளது. இந்த 12 பீட்டா வெர்ஷனில் கூகுள் பிக்சல் 5 போனில் டபிள் டெப் மூலம் ஸ்கிரீன்ஷாட், பாட்டு போடுவது, கூகுள் மீடியா அசிஸ்டெண்ட் அழைப்பது ஆகியவற்றை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


நோட்டிபிகேஷன்  லுக்(Notification panel look):




ஆண்ட்ராய்ட் 12ல் நோட்டிபிகேஷன் பெனல் டிஸ்பிளேயும் சற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் டார்க் தீம் பயன்படுத்தும் போது இன்னும் சிறப்பான ஒன்றாக அமைகிறது. 


மீடியா செயலிகள் கட்டுப்பாடு(Media Apps Control):




பாட்டு மற்றும் வீடியோ செயலிகள் அனைத்தும் தற்போது குயிக் மீடியா செட்டிங்கில் இடம்பெற்று உள்ளது. இதில் எந்தந்த செயலிகள் இடம்பெற வேண்டும் என்பதை தேர்வு செய்யும் முறை தற்போது ஆண்ட்ராய்ட் 12ல் இடம்பெற்றுள்ளது. இது செட்டிங்கி சவுண்ட் செட்டிங்கில் மீடியா என்ற இடத்தில் பயனாளர்கள் செய்து கொள்ளலாம். 


இந்த சிறப்பு அம்சங்கள் அனைத்தும் தற்போது பீட்டா வெர்ஷனில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முறையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திய பிறகு வரும் குறைகளை சரி செய்து இந்தாண்டு இறுதியில் ஆண்ட்ராய்ட் 12 வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போதைக்கு Google Pixel 3, Pixel 3 XL, Pixel 3A, Pixel 3A XL, Pixel 4, Pixel 4 XL, Pixel 4A, Pixel 4A 5G, மற்றும்  Pixel 5 ஆகியவற்றில் Android 12 Beta 1 டவுன்லோட் செய்துகொள்ளலாம். பின்னர் Settings > System > System Update கொடுத்தால் உங்களுக்கு ஆண்ட்ராய்ட் 12 பீட்டா வெர்ஷன் கிடைக்கப்பெறும். புதிய ஆண்ட்ராய்ட் உங்கள் போனில்  கிடைக்க சிறுது நேரம் எடுக்கலாம். 


இவை தவிர ஆசுஸ் சென்போன் 8, ஒன்ப்ளஸ் 9, ஒன்ப்ளஸ் 9 ப்ரோ, ஓபோ ஃபைண்ட் x3 ப்ரோ, டிசிஎல் 29 ப்ரோ 5ஜி, டெக்னோ கெமான் 17, Mi 11,Mi 11 அல்ட்ரா,  Mi 11i, Mi 11Xப்ரோ, ரியல்மி ஜிடி,  ZTE அக்ஃசான் 30 அல்ட்ரா 5G ஆகிய செல்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்ட் 12 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.