ஸ்மார்ட்ஃபோன்களில் எத்தனை செயலிகள் இருக்கிறது என ஒவ்வொருவருட ஒப்பீடு செய்யும் அளவிற்கு சூழல் இருக்கிறது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இருந்த இடத்திலிருந்தே பல வேலைகளை முடித்துவிடலாம். உணவு, மருந்து, மளிகை என பல தேவைகளைப் பூர்த்தி செய்ய செயலிகள் கிடைக்கின்றன. அப்படி, ஆண்ட்ராய்ட் மொபைல்கலில்  கூகுள் ப்ளேஸ்டோரில் ஆப்களை பதிவிறக்கம் செய்யலாம். இதில் புதிய மாற்றத்தை கொண்டு வர உள்ளது கூகுள். 




ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களில் கூகுள் ப்ளே ஸ்டோர் இன்பில்ட்டாக இருக்கும். இதிலிருந்து பயனர்கள் கட்டணம் செலுத்தியும் கட்டணம் இல்லாமலும் ஆப்களை பதிவிறக்கம் செயது கொள்ளலாம். தனியார் நிறுவனங்கள் கூகுளுக்கு சேவை கட்டணம் செலுத்தும். கூகுள் ப்ளே ஸ்டோர் பயனர்களின் வசதிக்கேற்ப பல்வேறு அப்டேட்களை பெற்றுள்ளது. சமீபத்தில், ப்ளே ஸ்டோரில் ஒரு செயலி 60 சதவீதம் பதிவிறக்கம் ப்ராசஸில் இருக்கும்போதே அதை பயனர்கள் லான்ச் செய்து பயன்படித்த முடியும்.


மீதமுள்ள ஃபைல்கள் பேக்ரவுண்டில் தரவிறக்கம் ஆகிவிடும். இப்போது புதிய வசதி ஒன்றை கூகுள் நிறுவனம் உருவாக்கி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


கூகுள் ப்ளே ஸ்டோர்


ஆண்ட்ராய்டு பயனர்கள் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்தால் அது தானாகவே லான்ச் ஆகும்படியான ‘App Auto Open’ என்ற புதிய ஆப்சனை விரைவில் அறிவிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக, செயலி முழுவதுமாக பதிவிறக்கம் ஆனவுடன் அதை லான்ச் செய்ய சில வழிமுறைகள் இருக்கும். வரவிருக்கும் புதிய அப்டேட்டில் ஆட்டோமேட்டிக்காக செயலி லான்ச் செய்யும் வசதியை பயனர்கள் ஆன் செய்து வைத்துகொள்ளலாம். இதன்மூலம், தனியாக செயலியை லான்ச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தானாகவே லான்ச் ஆகிவிடும். 


கூகுள் பிளே ஸ்டார் v41.4.19-ன் APK டீர்டவுனைச் செய்த Android Authority வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 'App Auto Open’ எனப் பெயரிடப்பட்ட புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இது தற்போது பீட்டா வர்சனில் மட்டும் கிடைக்கிறது.  


மேலும், செயலில் லான்ச் ஆனவுடன் அது குறித்து நோட்டிஃபிகேசன், வைப்ரேசன் என எப்படி நோட்டிஃபை செய்ய வேண்டும் என்பதையும் பயனர்கள் தெரிவு செய்யலாம். ஆட்டோமேட்டிக் வசதியை ஆன்/ஆஃப் செய்யும் வசதியும் பீட்டா வர்சனில் வழங்கப்பட்டுள்ளது.