இந்தியாவைச் சேர்ந்த ஸ்லைஸ் ஆப் பயனாளர்களின் தரவுகளை திருடுவதாகவும், அதை உடனடியாக அன் இன்ஸ்டால் செய்யுமாறும் கூகிள் வலியுறுத்தியுள்ளது.


கூகிள் எச்சரிக்கை:


கூகிள் நிறுவனத்தின் கூகிள் ப்ளே ப்ரொடக்ட் ஜூன் 24ம் தேதி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த கூகிள் ப்ரொடக்ட்டானது ஆண்ட்ராய்ட் ஆப்களை அவ்வபோது சோதனை செய்து, பயனாளர்களின் தரவுகளை திருடி ஊறுவிளைவிக்கும் ஆப்கள் எது என்பது பற்றி ஸ்கேன் செய்து அறிக்கை அளிக்கும். இந்த கூகிள் ப்ரொடக்ட்டானது, ஃபைன் டெக் நிறுவனத்தின் ஸ்லைஸ் ஆப் பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகளை உளவுபார்க்க முயற்சி செய்வதாக சமீபத்தில் தெரிவித்துள்ளது. இந்த ஸ்லைஸ் ஆப்பானது உங்களது சாதனத்தை ஆபத்தில் தள்ளியுள்ளது என்று கூறியுள்ளது.


அன் இன்ஸ்டால் செய்ய வலியுறுத்தல்:


ஸ்லைஸ் ஆப்பிற்கு வரும் நோட்டிஃபிகேஸனை பயனாளர்கள் க்ளிக் செய்தவுடன் அது பயனாளரின் தனிப்பட்ட டேட்டா, மெசேஜ், புகைப்படங்கள், ஆடியோ ரெக்கார்டிங்குகள் மற்றும் தொலைபேசி அழைப்பு தரவுகள் ஆகியவற்றிற்கு கொண்டு செல்வதாக ப்ளே ப்ரொடக்ட் கூறியுள்ளதோடு, ஸ்லைஸ் ஆப்பை தங்களது செயலிகளில் இருந்து அன்இன்ஸ்டால் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.


பதறி பதிலளித்த ஸ்லைஸ்:


கூகிள் ப்ளே ப்ரொடக்ட்டின் குற்றச்சாட்டிற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள ஸ்லைஸ் நிறுவனம், கூகிள் ப்ரொடக்ட் கூறியுள்ள குறைபாடு சரிசெய்யப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளது. இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று மாலை எங்களது ஆண்ட்ராய்ட் அப்டேடானது, கூகிள் ப்ளே ஸ்டோர் அபாய செய்தியை அனுப்பும் அளவிற்குகொண்டு சென்றுவிட்டது. நாங்கள் அதை விசாரணை செய்து 4 மணிநேரத்திற்குள்ளாக அந்த பிரச்சனையை சரி செய்துவிட்டோம். 1 சதவீத பயனாளர்கள் மட்டுமே முந்தைய வெர்ஷன் ஆப்பை பயன்படுத்துகின்றனர். நீங்கள் இந்த பிரச்சனையை சந்தித்தீர்கள் என்றால், உங்களது ஆப்பை அன் இன்ஸ்டால் செய்துவிட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று கடந்த 24ம் தேதி கூறியுள்ளது.






மீண்டும் ஜூன் 25ம் தேதி அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்லைஸ் நிறுவனம், “உங்களது தரவுகள் மற்றும் ப்ரைவசியை பாதுகாப்பதில் ஸ்லைஸ் நிறுவனம் எப்போதும் முனைப்புடன் உள்ளது. உங்களது தரவுகள் மற்றும் ப்ரைவசிக்கு ஊறுவிளைவிக்கும் எந்த ஒரு மாற்றத்திற்கும் இடம்கொடுக்காது என்று உறுதியளிக்கிறோம்” என்று கூறியுள்ளது.


மேலும், “இந்த தொழில்நுட்பப் பிரச்னையானது தனித்துவமானது. ஸ்லைஸ் யுபிஐ-ல் உள்ள இந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டுவிட்டது. எனினும், இதுபோன்று இனி நடக்காத வகையில் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






ஸ்லைஸ் ஆப் என்பது 2016ல் பெங்களூருவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நிதி தொழில்நுட்ப நிறுவனமாகும். இது விர்ச்சுவல் க்ரெடிட் கார்ட் மற்றும் ஸ்லைஸ் சூப்பர் கார்ட் ஆகியவற்றை வழங்கும் நிறுவனமாகும். இதுவும், கூகிள் பே, போன் பே போன்று பணம் செலுத்தும் சேவை உள்ளிட்டவற்றை செய்யும் ஆப் ஆகும்.