இதுவரை நீங்கள் உங்களின் உயர்தர புகைப்படங்கள் (ஹை ரெஷல்யூசன் புகைப்படங்களை) சேமித்துவைக்க கூகுள் ஃபோட்டோஸ் ஸ்டோரேஜை மட்டுமே நம்பியிருந்தீர்கள் என்றால் இனி கூகுள் இன் ஆப் மூலமாக சந்தா கட்டி சேவையை பெற தயாராகிக் கொள்ளுங்கள்.


கூகுள் ஃபோட்டோஸ் ஸ்டோரேஜ்.. பழைய, புதிய கொள்கை என்னென்ன?


இதுவரை, இணையத்தில் கிடைக்கும் சிறந்த புகைப்பட சேமிப்பு தளங்களில் ஒன்றாக கூகுள் போட்டோஸ் இருந்துவந்தது. இதில், உயர்தர புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, வரம்பற்ற அளவில் இலவசமாக சேமிக்க முடிந்தது. ஸ்டோரேஜ் பற்றிய கவலையே இல்லாமல் வாடிக்கையாளர்கள் இதை செய்ய முடிந்தது. வரம்பற்ற இலவச சேவை ஜூன் 1 உடன் முடிவுக்கு வந்துள்ளது. இப்போதுள்ள நடைமுறையின்படி 15 ஜிபி என்ற அளவிற்கு மட்டுமே படம், வீடியோக்களை சேமிக்க முடியும். அதற்குமேல் என்றால், அதற்கு கூகுள் ஒன் (Google One) என்பதற்கான சந்தாவை செலுத்தி கூடுதல் ஸ்டோரேஜ் ஸ்பேஸை வாங்க வேண்டும்.




ஸ்டோரேஜ் ப்ளான்கள் என்னென்ன?
 
கூகுள் ஒன் (Google One) ஸ்டோரேஜின்படி உங்களது கணக்குக்கு கூடுதலாக 100 ஜிபி வரை ஸ்டோரேஜ் ஸ்பேஸை சேர்த்துக் கொள்ளலாம். 100 ஜிபி பேசிக் ப்ளான் மாத சந்தா ரூ.130 தொடங்கி ஆண்டுச்சந்தா ரூ.1300 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 200 ஜிபி ப்ளான் என்றால் மாதச் சந்தா ரூ.210, ஆண்டுச் சந்தா ரூ.6,500. மாதத்துக்கு 10 டிபி (டெரா பைட்) ஸ்டோரேஜுக்கு ரூ.3,250, 20 டிபி ஸ்டோரேஜுக்கு ரூ.6,500, 30 டிபி ஸ்டோரேஜுக்கு ரூ.1300 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அப்படியென்றால் இதற்கு முன்னதாக அப்லோட் செய்யப்பட்ட புகைப்படங்கள் என்னவாகும்?


ஏற்கெனவே அப்லோட் செய்யப்பட்ட புகைப்படங்கள் புதிய கொள்கை முடிவால் பாதிக்கப்படாது என கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஆகையால், பழைய படங்களை டெலீட் செய்யவோ, இல்லை புதிய ஸ்டோரேஜுக்கு மாற்றவோ, தேவையில்லை. ஆனால், நீங்கள் ஜூன் 1-ஆம் தேதியில் இருந்து எடுக்கும் புகைப்படங்கள் அனைத்துமே கட்டண ஸ்டோரேஜ் ஸ்பேஸுக்கே செல்லும்.




கூகுள் ஃபோட்டோஸ் ஸ்டோரேஜில் என்னிடம் எவ்வளவு ஸ்பேஸ் இருக்கிறது என்பதை எப்படி தெரிந்துகொள்வது? 
 
உங்கள் கூகுள் கணக்குக்குச் செல்லுங்கள். அதில் அக்கவுண்ட் ஸ்டோரேஜ் மேனேஜ்மென்ட்டை லாகின் செய்யுங்கள். one.google.com/storage/management. என்ற சுட்டியில் இதற்கான இணைப்பு இருக்கிறது. அங்கே கூகுள் ஃபோட்டோஸ் ஸ்டோரேஜில் இருக்கும் இடம் குறித்தும் நீங்கள் எதையெல்லாம் நீக்கலாம் என்பது குறித்தும் தகவல் இடம்பெற்றிருக்கும்.


காதலியை தேடி பாகிஸ்தானில் நுழைந்த இளைஞர்; 4 ஆண்டுகளுக்கு பின் ரிலீஸான சிறை பறவை!


என்னிடம் பிக்சல் சாதனம் இருக்கிறது. நானும் புதிய கொள்கையால் பாதிக்கப்படுவேனா?




பிக்சல் சாதன பயனாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அவர்களும் எப்போதும் போல் வரம்பற்ற ஸ்டோரேஜ் வசதி கிடைக்கும். இருப்பினும்  Pixel 3a முதல் Pixel 5 வரையிலான சாதனம் வைத்திருப்போர் உயர்தர புகைப்படங்களை ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கவலையின்றி தொடர்ந்து பதிவேற்றலாம். ஆனால், ஒரிஜினல் தரத்துடன் கூடிய புகைப்படங்களை சேமிக்க சில விதிகள் இருக்கின்றன. குறிப்பிட்ட தொகையை செலவழித்து ஸ்டோரேஜ் பெற வேண்டும்.


Pixel 3 சாதனம் பயன்படுத்துவோர் ஒரிஜினல் தர புகைப்படங்கள், வீடியோக்களை வரம்பற்ற இலவச சேவையாக சேமித்துக் கொள்ளலாம். அதுவும் 2022 ஜனவரி 31 வரை இதனை வாடிக்கையாளர்கள் அனுபவிக்கலாம். Pixel 2 சாதனப் பயனாளர்களுக்கு 2021 ஜனவரி 1 வரை இச்சலுகை வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.