சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சில ஆண்டு சோதனைக்கு பின்னர் தற்போது வீடு திரும்பியுள்ளார். 2017ம் ஆண்டு மென்பொருள் பொறியாளரான ஹைதராபாத்தைச் சேர்ந்தபிரஷாந்த்  பிரஷாந்த் என்பார் தனது இணைய காதலியை சந்திக்க சட்டவிரோதமாக பாகிஸ்தான் நாட்டிற்குள் சென்றுள்ளார். இதனை அடுத்து சட்டவிரோதமாக பாகிஸ்தான் நாட்டிற்குள் நுழைந்ததற்காக அந்நாட்டு அதிகாரிகளால் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.








அவர் கைதான விஷயத்தை கேள்விப்பட்ட பிரஷாந்தின் தனத்தை பாபுராவ் தனது மகனை விடுவிக்க பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் முயற்சிகள் ஏதும் பயனளிக்காத நிலையில் 2019ம் ஆண்டில், பாபுராவ் சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி. சஜ்ஜனாரை சந்தித்து தனது மகனை விடுவிக்க உதவுமாறு கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து கமிஷனர் சஜ்ஜனர் அவருக்கு உதவி செய்ய முன்வந்து மத்திய அரசிடம் இந்த விவகாரத்தை எடுத்துச்செல்வதாக உறுதியளித்தார். 


Coronavirus Cases India: தினசரி கொரோனா இன்று அதிகரிப்பு, பலி மீண்டும் 3 ஆயிரத்தை தாண்டியது








இதனை தொடர்ந்து சுமார் 2 ஆண்டு காலமாக மென்பொருள் இன்ஜினியர் பிரஷாந்தை மீட்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் 2017ம் ஆண்டு ஆன்லைன் காதலாளியை பார்க்க பாகிஸ்தான் சென்ற அவர் 4 ஆண்டுகள் கழித்து தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிரஷாந்த் இன்று மாலை ஹைதராபாத் திரும்புவார் என்று தகவல் வெளியாகிய நிலையில், 4 ஆண்டுகள் பாகிஸ்தான் சிறையில் தனது காலத்தை கழித்த பிரஷாந்தை காண அவரது குடும்பத்தினர் மிகவும் ஆவலாக உள்ளனர். அவரது தந்தை பாபுராவ் மகனின் விடுதலைக்கு  உதவிய அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை கூறியுள்ளார்.   


4 ஆண்டுகள் கழித்து நாடு திரும்பிய பிரஷாந்தை சைபராபாத் போலீசார் அவரது குடும்பத்தினரிடம் பாத்திரமாக ஒப்படைத்தனர்.