உலகத்தையே டிஜிட்டல் தளங்கள் ஆட்சி செய்யத் தொடங்கியுள்ளது. காலை கண் விழிப்பது முதல் இரவு தூங்கச் செல்வது வரை நாம் பல டிஜிட்டல் தளங்களை கடக்க வேண்டியே உள்ளது. கூகுள், பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் , இன்ஸ்டா என பொதுவான இயங்குதளங்கள் பெரும்பாலானவர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பொழுதுபோக்கு என்பதையெல்லாம் தாண்டி தற்போது டிஜிட்டல் பலரின் வேலையோடும் ஒன்றிவிட்டது. அப்படியான ஒரு முக்கிய சோஷியல் மீடியாவான, ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஒவாக ஜேக் டார்சி நேற்று பதவி விலக, அதற்கான இடத்தில் பதவியேற்கவுள்ளார் இந்தியரான பரக் அக்ராவல். 


முக்கிய சோஷியல் மீடியாவான ட்விட்டரை இனி நிர்வகிக்கப் போவது ஒரு இந்தியர் என்பதை உலக நாடுகளை கவனிக்க வைத்துள்ளது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை,  உலகத்தையே தன் கைக்குள் வைத்திருக்கும் சில முக்கிய நிறுவனங்களை தன் கைக்குள் வைத்திருக்கிறார்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். Google, Microsoft, IBM , Adobe, VMWare என இருந்த பட்டியலில் தற்போது Twitter இணைந்துள்ளது. இதனை சரியாக குறிப்பிட்டுள்ள ஸ்ரைப் நிறுவனத்தின் சி இ ஓ, '' கூகுள், மைக்ரோசாப்ட், ஐபிஎம், அடோப் போன்ற முக்கிய நிறுவனங்களின் சி இ ஓக்கள் இந்தியாவின் வளர்ந்தவர்களாகவே உள்ளனர். தொழில்நுட்ப உலகில் இந்தியர்களின் வியத்தகு வெற்றியை ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. அதேபோல் திறமையான வெளிநாட்டினரை அமெரிக்கா தக்க வைத்துக்கொள்வதையும் மறுப்பதிக்கில்லை என குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க், இந்திய திறமைகளால் அமெரிக்கா பெரிதும் பயனடைகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.










பரக் அக்ராவல்:


இந்தியாவிலுள்ள மிகச் சிறப்பான ஐஐடி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி பாம்பேவில் பரக் அக்ராவல் இளங்கலை பட்டத்தை முடித்தார். அதன்பின்னர் 2011ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழக்கத்தில் கணினி அறிவியியலில் முனைவர் பட்டம் பெற்றார். அந்த சமயத்தில் யாஹூ, மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பயிற்சி பெறும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன்பின்னர் 2011ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தில் விளம்பரம் தொடர்பாக செயல்படும் பொறியியாளராக பணியில் சேர்ந்தார். 


சுந்தர் பிச்சை:




எதுவாக இருந்தாலும்  கூகுளில் தேடு என சொல்வார்கள். ஆனால் அந்த கூகுளே தேடிப் பிடித்த ஆள் தான் சுந்தர் பிச்சை. உலக நாடுகளை இணைக்கும் இணைய அரசனாக திகழும் கூகுளின் முதன்மை செயல் அலுவலரான சுந்தர் பிச்சை பிறந்தது  மதுரையில் தான். ரகுநாத பிச்சை-லட்சுமி தம்பதிகளுக்கு 1972 ஜூன் 10ல் பிறந்த சுந்தர் பிச்சை, படித்து வளர்ந்தது எல்லாம் சென்னை. சென்னை ஜவகர் வித்யாலயாவில் பத்தாம் வகுப்பும், வனவாணி பள்ளியில் பிளஸ் 2 முடித்த சுந்தர் பிச்சைக்கு அடிப்படை கல்வியை ஊட்டி வளர்த்தது தமிழ்நாடு. மேற்கு வங்கத்தில் கரக்பூரில் உலோகப் பொறியியல் முடித்த சுந்தர் பிச்சைக்கு அதுவரை, மிடியல் கிளாஸ் வாழ்க்கை தான். அமெரிக்கா பறக்க தயாராகும் அந்த நொடி வரை அவருக்கான அறிவுக்கல்வியை வழங்கியது இந்தியாவும், அதனுள் அடங்கும் தமிழ்நாடும் தான். 


சத்யா நாதெள்ளா:


கடந்த ஜூன் மாதம் மைக்ரோசாப்டின் தலைவரானார் சத்யா நாதெள்ளா. ஹைதராபாத்தில் பிறந்த சத்ய நாதெள்ளா, மணிப்பால் பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்புப் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். 2014ம் ஆண்டு தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றிருந்த சத்யா நாதெள்ளா மைக்ரோசாப்டின் வணிகத்தை பெருமளவில் உயர்த்தினார். அதன் தொடர்ச்சியாகவே தலைவர் பதவியும் அவரைதேடி வந்தது.


அரவிந்த் கிருஷ்ணா:




 ஏப்ரல் 2020 முதல் ஐபிஎம்மின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வருபவர் அரவிந்த் கிருஷ்ணா. இந்திய அமெரிக்க வணிக நிர்வாகியான இவர் 1990ல் ஐபிஎம்ல் ஆராய்ச்சி மையத்தில் வேலையை தொடங்கினார்.


சாந்தணு நாராயண்:


அடோப் நிறுவனத்தின் சி இ ஓவாக இருக்கும் சாந்தணு நாராயண் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர். தெலுங்கு பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவரான சாந்தணு, ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் இன்ஜினியரிங்கில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். முதுகலை படிப்பை அமெரிக்காவில் முடித்த அவர் தற்போது அடோப் நிறுவனத்துக்காக பணியாற்றுகிறார்.