கூகுள் தனது மெசேஜர்க்களின் குழு அரட்டைகளுக்கு எண்ட்-டூ-எண்ட் என்க்ரிப்ஷனை சோதனை செய்யத் தொடங்கியுள்ளது.
கூகுள் இந்த ஆண்டு தொடக்கத்தில் RCS (ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ்) மூலம் குழு அரட்டைகளுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை வழங்கும் திட்டத்தை அறிவித்தது. இந்த நிலையில் அதன் சோதனை ஓட்டம் துவங்கியிருப்பதற்கான குறுஞ்செய்திகளை குரூப் சாட்டினை பயன்படுத்தும் Reddit பயனாளர்கள் பெற்றுள்ளனர். அதாவது குரூப் சாட்டினை பயன்படுத்துவோருக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதி பெறப்பட்டதாக மெசேஜ் வந்திருக்கிறது. 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்த எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷ அம்சம் உலகளவில் அமலுக்கு வந்தது. Google Messages இன் RCS முதன்முறையாக என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனைப் பெற்றது. முதன் முதலில் வழங்கப்பட்ட எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் குழு சாட் செய்பவர்களுக்கு வழங்கப்படவில்லை . ஏனெனில் அந்த நேரத்தில் ஒருவருடன் ஒருவர் உரையாடலுக்கு மட்டுமே மிகவும் பாதுகாப்பான செய்தி இருந்தது.
அதன் பிறகுதான் ஐஓஎஸ் பயனாளர்கள் பயன்படுத்தும் எமோஜி உள்ளிட்ட வசதிகள் ஆண்ட்ராய்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் நிறுவனம் சமீப காலமாக தனக்கு கீழ் இயங்கும் செயலிகளில் பல மாற்றங்களை செய்து வருகிறது. ஆண்ட்ராய்டுக்கான ஜிமெயிலில் கீழ் ரிப்பன் லேபிள்களுக்கான வடிவமைப்பு அளவில் சிறிய மாற்றத்தைப் பெறத் தொடங்கியுள்ளதாக 9to5Google என்னும் கூகுள் குறித்த அப்டேட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து ஆண்ட்ராய்டில் உள்ள ஜிமெயில் ஆப்ஸ் கீழ் ரிப்பனில் உள்ள ஐகான்களுக்குக் கீழே உள்ள 'லேபிள்கள்' இனி மெல்லக் காணாமல் போகும். ஜிமெயில் பயன்பாட்டில் தற்போது மெயில், அரட்டை, ஸ்பேஸ்கள் மற்றும் சந்திப்பு போன்ற ஐகான்களுக்கு கீழே லேபிள்கள் இடம்பெற்றிருக்கும். வெளியிடப்பட்டுள்ள அப்டேட்டின்படி, சில பயனர்கள் லேபிள்கள் இல்லாமல் ஜிமெயில் பதிப்பை இதன்மூலம் கொண்டுள்ளனர். மேலும் இது இப்போது உலகம் முழுவதும் அதிகமான பயனர்களுக்கு அப்டேட் ஆக உள்ளது.
இதே போல கூகுளின் கீழ் இயங்கும் யூடியூபிலும் புதிய அப்டேட்டை கொண்டுவரவுள்ளது. அதன் அடிப்படையில் கண்டெண்ட் கிரியேட்டர்களுக்கும் அவர்களை பின் தொடரும் பயனாளர்களுக்கும் எளிமையான அனுகலை வழங்கும் பொருட்டு மூன்று பிரிவுகளை (tabs) அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் ஒரு பிரிவு ஷார்ட்ஸ் வீடியோக்களையும் , மற்றொரு பிரிவு நீண்ட வீடியோக்களையும் , மூன்றாவது பிரிவு லைவ் ஸ்ட்ரீமிங் வீடியோக்களையும் காட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கிரியேட்டர்ஸின் சேனலுக்கு வரும் சப்ஸ்கிரைபர்ஸ் கண்டெண்டின் தேர்வை எளிதாகக் கண்டறிய இந்த அப்டேட் உதவும் என்று YouTube நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், யூடியூப் சமீபத்தில் புதிய வடிவமைப்பு கூறுகள் மற்றும் தயாரிப்பு அம்சங்களை வெளியிடுவதாக அறிவித்தது, இதில் பிளாட்ஃபார்மில் பயனர் அனுபவத்தை மேம்படுத்த, வீடியோக்களை பெரிதாக்க ( zoom in) மற்றும் வெளியேற்றுவதற்கான ( out for videos) உள்ளிட்ட வசதிகள் இடம்பெறவுள்ளன. இது கிரியேட்டர்ஸ் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.