பொதுவான சினிமா நடிகைகளுக்கான இலக்கணத்துக்குள் அடங்காத உடல்வாகுடன், 80களின் இறுதியில் தொடங்கி தமிழ் சினிமாவில் கோலோச்சி,அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தவர் நடிகை குஷ்பு.
தமிழ், தெலுங்கு, இந்தி என முன்னணி நடிகர்களுடன் நடித்து கோலோச்சி வந்த குஷ்புவை, அவரது கரியரின் உச்ச காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சியை 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு தமிழ்நாட்டு மருமகளாக செட்டிலான குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் தன் 'காஃபி வித் காதல்' படம் குறித்த நேர்க்காணலில் கலந்துகொண்ட சுந்தர். சி, தன் மனைவியும் நடிகையுமான குஷ்புவுக்கு கோயில் கட்டியது, அவர் பெயரில் இட்லி உருவானது ஆகியவை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
குஷ்பு இவ்வாறு தமிழ்நாட்டில் கொண்டாட்டப்படுவது அவருக்கு பொசசிவ் உணர்வை ஏற்படுத்தியதா என இந்த நேர்காணலில் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த சுந்தர் சி, தான் குஷ்புவைக் காதலிப்பதற்கு முன்னதாகவே இவையெல்லாம் நடந்து முடிந்து விட்டதாகவும், எனவே தான் பொசசிவ்வாகவெல்லாம் உணரவில்லை என்றும் பதில் அளித்துள்ளார்.
இயக்குநர் சுந்தர்.சியின் காபி வித் காதல் படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. முக்கோணமாக காதல் கதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா, ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் பிரதாப் போத்தன், யோகி பாபு மற்றும் சின்னத்திரை பிரபலம் டிடியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா அமைத்துள்ளார்.