கூகுள் நிறுவனம் வழங்கிவரும் ரிச் கம்யூனிகேசன் சேவைகளில் அதிகளவு விளம்பரங்கள் வருவதாக புகார் எழுந்ததையெடுத்து இச்சேவைகள் நிறுத்தப்பட உள்ளது. கூகுள் ரிச் மெசேஜ் சேவைகள் பிசின்ஸ் செய்வபர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விளம்பரங்கள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்ட தகவல்களை பகிர்வதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆண்ட்ராய்டு மெசேஜில் ரிச் கம்யூனிகேசன் சர்வீஸ் என்ற வசதியை எனேபில் செய்யலாம். மேலும், இதில் ‘Verified Business’ என்ற லேபிள் உடன் இருப்பதால் அதன் வழியாக அதிக விளம்பரங்களையும் பயனர்களின் ஸ்பாஸ் செய்வதால் சேவை நிறுத்தப்படுகிறது.
ரிச் கம்யூனிகேசன் சர்வீஸ் (Rich Communication Services):
ரிச் கம்யூனிகேசன் சர்வீஸ் மூலம் வணிகர் ஒருவர் தனது வாடிக்கையாளர்/பயனாளர் தன்னை எளிதாக தொடர்புகொள்ளும் வசதியை வழங்குகிறது.
உதாரணமாக, நீங்கள் கூகுள் மேப், கூகுள் உள்ளிட்ட தளங்களில் ஒரு கேக் ஷாப்பை தேடுகிறீர்கள் என்றால் அவற்றில் அந்த கேக் ஷாப்புடன் எளிதாக தொடர்புகொள்வதற்கு வசதியாக ‘கூகுள் மெசேஜ்’ ஐகான் வழங்கப்படிருக்கும். இதன்மூலம், கடைக்காரரிடம் நீங்கள் பேச முடியும். இதன் வழியாக நிறுவனங்கள் விளம்பரங்களை அனுப்ப முடியும்.
இனி இந்தியாவில், பிசினஸ் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்கள் சார்ந்த தகவல்களை அனுப்ப கூகுள் மெசேஜ்களைப் பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு விளம்பரச் செய்திகளை அனுப்ப சில வணிக நிறுவனங்கள் எங்களின் ஸ்பேம் எதிர்ப்புக் கொள்கைகளை தவறாகப் பயன்படுத்துவதை உணர்கிறோம். பயனர்களுக்கான அனுபவத்தை மேம்படுத்துவதற்காக தொழில்துறையுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இந்தியாவில் இந்த அம்சத்தை முடக்குகிறோம்.” என்றார்.
எனினும், இந்த அம்சம் உலகளவில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது, இருப்பினும், இந்தியாவில் இருந்ததைப் போல நிலைமை ஒருபோதும் மோசமாகவில்லை. கூகுள் இந்த அம்சத்தை முடக்கியுள்ளது மற்றும் பயனர்களுக்கு அனுபவத்தை மேம்படுத்த தொழில்துறையுடன் இணைந்து செயல்படுவதாக உறுதியளித்துள்ளது. இருப்பினும், அம்சத்தை மூடுவது ஒரு தற்காலிக தீர்வாகத் தெரிகிறது. இந்த நேரத்தில், நிறுவனம் எதிர்காலத்தில் நிலைமையை எவ்வாறு சமாளிக்க திட்டமிட்டுள்ளது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்