கூகுள் நிறுவனம் சமீபத்தில் தனது ப்ளாக் போஸ்ட்டில் வெளியிட்ட அறிக்கையில் அதன் வீடியோகால் அப்ளிகேஷன்களான Meet மற்றும் Duo விரைவில் ஒன்றிணைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.கூகுள் மீட் அப்ளிகேஷனின் அனைத்து திறன்களையும் ட்யோ பயன்பாட்டில் வரும் வாரங்களில் ஒருங்கிணைக்கும். ட்யோ ஆப்ஸ் இந்த ஆண்டின் பிற்பகுதியில் கூகுள் மீட்டாக ஆக மாற்றப்பட்டு, மீட்-ஐ நிறுவனத்தின் ஒரே வீடியோ தொடர்புச் சேவையாக மாற்றும்.


கூகுள் தனது பல்வேறு செய்திப் பகிர்வு அப்ளிகேஷன்களை ப்ராண்டிங், ரீ ப்ராண்டிங் செய்வதும், ஷெல்விங், ரீ-ஷெல்விங் செய்வதும் பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது. அதன்படி காலப்போக்கில் கூகுள் பஸ் உள்ளிட்ட அதன் பல்வேறு அப்ளிகேஷன்கள் இடப்பெயர்வோ அல்லது நீக்கம் செய்யப்பட்டோ இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது ட்யோ இடம்பெற்றுள்ளது. 


இதன்படி ட்யோ அதன் தற்போதைய அனைத்து வீடியோ அழைப்பு அம்சங்களையும் பாதுகாக்கும், மேலும் நீங்கள் ட்யோ பயனராக இருந்தால், உங்கள் உரையாடல் வரலாறு, தொடர்புகள் மற்றும் செய்திகள் பாதுகாக்கப்படும், ஏனெனில் இதனைப் பதிவிறக்குவதற்கு வேறு ஆப்ஸ் கிடையாது. அழைப்புகள் மற்றும் சந்திப்புகளில் ப்ரைவட்டாக மாற்றக்கூடிய விர்ச்சுயல் செட்டிங்கள், சந்திப்பு திட்டமிடல், இன்-மீட்டிங் அரட்டை, நேரலை உள்ளடக்கப் பகிர்வு,  100 பங்கேற்பாளர்கள் வரையில் சேர்க்கக்கூடிய வீடியோ அழைப்புகள், தேவையற்ற சத்தம் ரத்துசெய்தலுடன் மேம்படுத்தப்பட்ட வீடியோ மற்றும் ஆடியோ அனுபவங்கள் மற்றும் ஜிமெயில், கேலெண்டர், அசிஸ்டண்ட் மற்றும் மெசேஜ்கள் போன்ற பிற Google கருவிகளுடன் ஒருங்கிணைத்தல் போன்ற புதிய அம்சங்களை அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.


முன்னதாக, கூகுள் நிறுவனம் வழங்கிவரும் ரிச் கம்யூனிகேசன் சேவைகளில் அதிகளவு விளம்பரங்கள் வருவதாக புகார் எழுந்ததையெடுத்து இச்சேவைகள் நிறுத்தப்பட உள்ளது. கூகுள் ரிச் மெசேஜ் சேவைகள் பிசின்ஸ் செய்வபர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விளம்பரங்கள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்ட தகவல்களை பகிர்வதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 


ஆண்ட்ராய்டு மெசேஜில் ரிச் கம்யூனிகேசன் சர்வீஸ் என்ற வசதியை எனேபில் செய்யலாம்.  மேலும், இதில் ‘Verified Business’ என்ற லேபிள் உடன் இருப்பதால் அதன் வழியாக அதிக விளம்பரங்களையும் பயனர்களின் ஸ்பாஸ் செய்வதால் சேவை நிறுத்தப்படுகிறது


நீங்கள் ஏற்கனவே Duo அல்லது Meetஐ இலவசமாகப் பயன்படுத்தினால், புதிய அப்டேட்டுக்காக நீங்கள் எதையும் செலுத்த வேண்டியதில்லை என்று அறிக்கை கூறுகிறது. "நீங்கள் தற்போது மீட் ஆப்ஸைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், பழைய மீட் ஆப்ஸை மீட் என மறுபெயரிட்டவுடன் அதைத் திறக்கும் போது, ​​ட்யோ-ஐ நிறுவுவதற்கான தேர்வு உங்களுக்கு வழங்கப்படும்." அதுவரை, அசல் மீட் ஆப்ஸ் வழக்கம்போல் செயல்படும், மேலும் ஜிமெயில் இன் மீட் அம்சம் ஆப்ஸால் பாதிக்கப்படாது.


ரிச் கம்யூனிகேசன் சர்வீஸ் (Rich Communication Services):


ரிச் கம்யூனிகேசன் சர்வீஸ் மூலம் வணிகர் ஒருவர் தனது வாடிக்கையாளர்/பயனாளர் தன்னை எளிதாக தொடர்புகொள்ளும் வசதியை வழங்குகிறது. 


உதாரணமாக, நீங்கள் கூகுள் மேப், கூகுள் உள்ளிட்ட தளங்களில்  ஒரு கேக் ஷாப்பை தேடுகிறீர்கள் என்றால் அவற்றில் அந்த கேக் ஷாப்புடன் எளிதாக தொடர்புகொள்வதற்கு வசதியாக ‘கூகுள் மெசேஜ்’ ஐகான் வழங்கப்படிருக்கும். இதன்மூலம், கடைக்காரரிடம் நீங்கள் பேச முடியும். இதன் வழியாக நிறுவனங்கள் விளம்பரங்களை அனுப்ப முடியும்.