நாள்: 04.06.2022
நல்ல நேரம் :
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை
இராகு :
காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை
குளிகை :
காலை 6 மணி முதல் காலை 7.30 மணி வரை
எமகண்டம் :
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை
சூலம் – கிழக்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு தடங்கல் ஏற்படும். முக்கிய காரியங்களுக்கு செல்வது, வேலைக்கு செல்வதில் கூட தாமதம் ஏற்படலாம். முக்கிய விவகாரங்களை ஒத்திவைப்பது நல்லது. அடுத்தவர் விவகாரத்தில் தேவையில்லாமல் தலையிடக்கூடாது.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு மிகவும் லாபகரமான நாளாக அமையும். பணவரவு, தனவரவு உண்டாகும். நண்பர்கள் மற்றும் சுற்றத்தார் மத்தியில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். பெற்றோர் வழியில் இன்பமான செய்தி வந்தடையும். வீட்டில் மங்கல ஓசைகள் ஒலிக்கும்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, மனதில் தேவையற்ற அச்சம் உண்டாகும். தேவையில்லாத விவகாரங்களை மனதில் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது. சிவபெருமானை வணங்கினால் சிரமம் நீங்கும். வேலைபார்க்கும் இடங்களில், குடும்ப சிக்கல்களில் அமைதியை கடைபிடித்தால் பெரிய பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, இந்த நாள் நீங்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். உங்களது முடிவுகளுக்கு வீடுகளிலோ, அலுவலகங்களிலோ எதிர்ப்பு உண்டாகலாம். பொறுமையுடன் செயல்பட வேண்டும். அவசரமாக வெளியூர் செல்ல வேண்டிய சூழல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு அற்புதமான நாளாக அமையும். நீண்டநாளாக வசூலாகாத கடன்தொகை வசூல் ஆகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத முன்னேற்றம் அமையும். நண்பர்கள், பெற்றோர்கள் தக்க நேரத்தில் உதவி செய்வார்கள்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, இந்த நாள் உங்களது செல்வாக்கு அதிகரிக்கும். உங்களது சமயோஜித திறமையால் அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் பாராட்டுவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிட்டும். தைரியமான முடிவு எடுக்கும் நாள்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு வீண்செலவு உண்டாகும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் உடல்நலனில் கூடுதல் அக்கறையுடன் செயல்பட வேண்டும். வெளியூர் பயணங்களை ஒத்திவைப்பது நல்லது. அம்மனை வழிபட்டு மன அமைதி காணலாம்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு ஆதாயமான நாளாக அமையும். இந்த நாள் நீண்டநாட்களாக நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த சம்பவம் நடைபெறும். மனதிற்கு பிடித்தவர்களின் சந்திப்பு நிகழும். சகோதர வழியில் கூடுதல் அக்கறையுடன் முடிவு எடுக்க வேண்டும்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, இந்த நாள் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். தொலைபேசி வழித்தகவல்களால் இன்பமான சூழல் ஏற்படலாம். பெற்றோர்கள் பிள்ளைகள் இடையே இருந்த மனக்கசப்பு நீங்கும்.
மகரம் :
மகர ராசி நேயர்களே, தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கும். சொந்த தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். வாகனம் மற்றும் வீடு வாங்கும் யோகம் உண்டு. பூர்வீகச் சொத்துக்களில் நீடித்து வந்த சிக்கல் நிரந்தர தீர்வுக்கு வரும்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, இந்த நாள் மனதிற்கு பிடித்தவர்கள் மீது அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் நீண்டநாட்களாக நீடித்து வந்த சிக்கல் முடிவுக்கு வரும். காதலர்கள் இடையே அன்பு அதிகரிக்கும். பெற்றோர்கள் உங்களது முடிவுக்கு ஒத்துழைப்பார்கள். நம்பிக்கை அதிகரிக்கும்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு நன்மையான நாளாகும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமான முடிவுக்கு வரும் சூழல் உண்டாகும். தொலைதூரப் பயணம் செய்வதற்கான வாய்ப்பு உருவாகலாம். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். மாணவர்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்