சூரிய கிரணம் நிகழ்வுக்கு கூகுள் சிறப்பு அனிமேஷன் வெளியிட்டுள்ளது. 


சூரிய கிரகணம்


இன்று (08/04/2024) முழு நேர சூரிய கிரகணம் நிகழ்கிறது. வானியல் நிகழ்வுகளில் ஆர்வம் உள்ளவர்கள் இதை வரவேற்க ஆர்வமாக உள்ளனர். வட அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்த முழு சூரிய கிரகணத்தை காண முடியும். கனடா, மென்சிகோ உள்ளிட்ட நாடுகளிலும் கிரகணம் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகணம் அதிக நேரம் நீடிக்கும் என்பதால் பல சோதனை நடத்த நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.  சூரியன் முழுமையாக மறையும் நிகழ்வு 4 நிமிடங்கள் 27 வினாடிகள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கூகுள் சிறப்பு அனிமேஷன் 


கூகுள் நிறுவனம் முக்கிய நிகழ்வுகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாட்கள், வரலாற்று சிறப்புமிக்க ஆளுமைகள், அறிவியல் நிகழ்வுகள் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்தவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கூகுள் டுடூல் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இன்று (08.04.2024) நிகழும் சூரிய கிரகணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கூகுள் அனிமேஷன் ஒன்றை வெளியிட்டுள்ளது. 


கூகுளில் சில வார்த்தைகளை குறிப்பிட்டு ‘சர்ச்’ கொடுத்தால் ’சூரிய கிரகணம்’ குறித்த அனிமேஷன் வரும்.


ஆங்கிலத்தில் இந்த வார்த்தைகள் குறிப்பிட்டால் அனிமேசன் தோன்றும்



  • April 8 eclipse

  • Eclipse 2024

  • Solar eclipse

  • Solar eclipse 2024

  • Total Solar Eclipse


தமிழில் ‘சூரிய கிரகணம்’ என்று குறிப்பிட்டாலும் அனிமேஷன் ஸ்கிரினில் தோன்றும். 


சூரிய கும்பத்தில் பூமிக்கு அருகில் உள்ளது சந்திரன். சந்திரன் சூரியனை விட 400 மடங்கு சிறயது. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருவது நாம் அறிந்ததே. சந்திரன் சுற்றுவட்டப் பாதையில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரும். அப்போது, சந்திரனின் நிழல் சூரியனை மறைப்பதால் பூமியில் சில நிமிடங்கள் இருளான இருக்கும். இதுவே சூரிய கிரணம்.


கூகுள் இதை இரண்டு நிமிடங்களுக்குள் அனிமேஷனாக செய்துள்ளது. சூரியன் மறைந்து இருள் சூழ்ந்து பின், வெளிச்சம் வருவது போன்று ஸ்கிரில் வருகிறது. சூரிய கிரணம் எப்படி நிகழ்கிறது, சூரிய கிரகணத்தை நேரில் பார்க்க முடியாது என்பவர்களுக்கு அந்நிகழ்வை இது அனிமேஷனாக விளக்கியுள்ளது. நீங்களும் கூகுளில் ’April 8 eclipse’,’Eclipse 2024’, ’சூரிய கிரகணம்’ என டைப் செய்து அனிமேஷனைக் காணுங்களேன்.




மேலும் வாசிக்க..


Solar Eclipse: இன்று தோன்றும் முழு சூரிய கிரகணம்.. உலகில் எந்த பகுதியில் மக்கள் இதனை காணலாம்?