இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் உருவாக்குகின்றன.
சமூக ஊடகங்களில் (Social Media) பல வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது ; புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை
சிறு குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம் அவர்களின் அழகான கியூட்டான செயல்களால் நாம் ஈர்க்கப்படுகிறோம். அவர்களது சிரிப்பு, விளையாட்டு, துறுதுறுப்பான செய்கைகள் ஆகியவற்றைப் பார்த்து நாம் நம் கவலைகளை மறந்து விடுகிறோம்.
அப்படி ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வலம் வருகிறது. கேரளாவில் ஒரு குழந்தை தாயின் மடியில் வைத்து உணவு கொடுத்து கொண்டு இருக்கும் போது தந்தை உணவு அளிப்பதற்காக குழந்தையின் வாயை திறக்க கூறுகிறார்.
அப்போது எனக்கு ஒன்றும் வேண்டாம் என குழந்தை கூற அதற்கு தந்தை சோறு சாப்பிட வாய் திற என மீண்டும் அதட்டி குழந்தையிடம் கூறுகிறார். அதனையடுத்து அந்தக் குழந்தை தன் மழலை மலையாள மொழியில் அழுதுகொண்டு கையெடுத்து கும்பிட்டு ‘நான் பாவம் இல்லா அப்பா’ (Acha)என பேசுகிறாள். தற்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: தேர்தலை புறக்கணிக்குமாறு போஸ்டர்... போட்டோ எடுக்கச் சென்ற பத்திரிக்கையாளருக்கு காத்திருந்த கண்ணிவெடி! மாவோயிஸ்டுகள் அட்டூழியம்