கூகுள் சமீபத்தில் ப்ளே ஸ்டோரில் 10 செயலிகளை தடை செய்துள்ளது, இந்த செயலிகள் ஃபோன் எண்கள் மற்றும் பிற முக்கிய தகவல்கள் உட்பட பயனர்களின் தரவை சேகரிக்கின்றன. தடைசெய்யப்பட்ட செயலிகள் அத்தனையும் இதுவரை 60 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
உலகளாவிய பப்ளிகேஷன் ஒன்றின் தகவலின்படி, இந்த செயலிகள் துல்லியமான இருப்பிடத் தகவல், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்கள், அருகிலுள்ள சாதனங்கள் மற்றும் கடவுச்சொற்களை சேகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. வழக்கமாக, Google Play Store இல் ஒரு செயலியை பல பாதுகாப்புச் சோதனைகளுக்குப் பிறகுதான் தரவிறக்கம் செய்யக் கிடைக்கும்படி Google அனுமதிக்கிறது. இருப்பினும், கடுமையான நடைமுறை இருந்தபோதிலும், பல ஆபத்தான செயலிகள் Play Storeல் இடம் பெற்றுள்ளன. இப்போது தடைசெய்யப்பட்ட இந்த பயன்பாடுகள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக அவை உடனடியாக அன் இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும் என ப்ளே ஸ்டோர் எச்சரித்துள்ளது.
கூகுள் ப்ளே ஸ்டோரால் தடைசெய்யப்பட்ட 10 ஆப்ஸின் பட்டியல் இங்கே.
Speed Radar CameraAl-Moazin Lite (Prayer times) Wi-Fi Mouse (Remote Control PC)QR & Barcode Scanner ( AppSource Hub என்னும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது)Qibla Compass - Ramadan 2022Simple Weather & Clock Widget ( Difer என்னும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது)Handcent Next SMSSmart kit 360Full Quran MP3-50 Languages & Translation AudioAudiosdroid Audio Studio DAW
முன்னதாக,
கூகுள் ப்ளே ஸ்டோரில் தளத்தில் நிறையே செயலிகள் தினந்தோறும் பலரால் பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் பல செயலிகளை தினமும் பலரும் அப்டேட் செய்து வருகின்றனர். அப்படி இருக்கும் பட்சத்தில் சமீபத்தில் தங்களுடைய வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தனிநபர் தகவல்களை தேவையில்லாமல் சேகரித்து தனிநபர் தரவுகளை திருடும் செயலிகளை கூகுள் நிறுவனம் தொடர்ந்து தடை செய்து வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் 150 செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது தனி நபர் தரவு பாதுகாப்பு கொள்கைகளை மீறியதாக கூறி கூகுள் நிறுவனம் மேலும் 3 போட்டோ எடிட்டிங் செயலிகளை தன்னுடைய தளத்திலிருந்து நீக்கியுள்ளது.
அதன்படி எந்தெந்த செயலிகள் நீக்கப்பட்டுள்ளன?
தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து மேஜிக் போட்டோ லேப் எடிட்டர்(Magic Photo Lab - Photo Editor'), பிளேண்டர் போட்டோ எடிட்டர் (Blender Photo Editor-Easy Photo Background Editor'), பிக்ஸ் போட்டோ மோஷன் எடிட் 2021 (Pics Photo Motion Edit 2021) ஆகிய செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன.
தடை செய்யப்பட காரணம் என்ன?
இந்த மூன்று செயலிகளும் சுமார் 3மில்லியன் பயனாளர்களின் தனிநபர் விவரங்களை தரவு பாதுகாப்பு கொள்கையை மீறி பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தரவு பாதுகாப்பு அமைப்பான கேஸ்பர்ஸ்கி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த செயலிகளில் வாடிக்கையாளர் தங்களுடைய முகநூல் கணக்கு மூலம் உள் சென்று இருந்தால் அவர்களுடைய பேஸ்புக் தகவல்களும் திருடப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த செயலிகளை வைத்திருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்த தடை செய்யப்பட்ட மூன்று போட்டோ எடிட்டிங் செயலிகளை பதிவிறக்கம் செய்து வைத்துள்ளவர்கள் உடனடியாக தங்களுடைய மொபைலில் இருந்து இந்த செயலிகளை நீக்க வேண்டும். மேலும் உங்களுடைய முகநூல் கணக்கின் கடவுசொல்(பாஸ்வேர்டு) உள்ளிட்டவற்றை மாற்றுவது மிகவும் முக்கியமான ஒன்று.
இதுபோன்ற செயலிகளை ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யும் போது வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமான ஒன்று பல பாதுகாப்பு வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே வாடிக்கையாளர்கள் இதுபோன்ற செயலிகள் தங்களுடைய முகநூல் கணக்கின் மூலம் உள் நுழைவதை தவிர்க்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.