பயனாளர்களின் அனுபவத்தை மேம்படுத்த தற்போது கூகுள், தனது மின்னஞ்சல் அம்சமான ஜி மெயிலில் மூன்று புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. துல்லியமான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட தேடல் பரிந்துரைகள் மற்றும் முடிவுகளுக்காக இந்த வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஜி மெயிலில் அறிமுகமாகியுள்ள முன்று வசதிகள் :
தேடல் பரிந்துரைகள்( Search suggestions)
ஜி மெயில் லேபிள்கள் (Gmail labels)
தொடர்புடைய முடிவுகள்(Related results)
இந்த அம்சங்கள் எந்த நிர்வாகக் கட்டுப்பாட்டையும் ( admin control) ஐ கொண்டிருக்காது என கூகுள் தெரிவித்துள்ளது.
தேடல் பரிந்துரைகள்( Search suggestions)
'தேடல் பரிந்துரைகள்' வசதி மூல பயனர்கள் Chat search பகுதியில் தட்டச்சு செய்யும் போது தேடல் வினவலைப் பார்க்க முடியும், இது அவர்களின் முந்தைய தேடல் வரலாற்றின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. மேலும், மொபைலில் முக்கியமான செய்திகள், கோப்புகள் மற்றும் பலவற்றை விரைவாக நினைவுபடுத்த பயனருக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. Search suggestions அம்சம் அனைத்து ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கும் கிடைக்கிறது மற்றும் அக்டோபர் இறுதிக்குள் iOS சாதனங்களில் வெளியிடப்படும்.
ஜி மெயில் லேபிள்கள் (Gmail labels)
இந்த வசதியானது பயன்பாட்டில் உள்ள குறிப்பிட்ட ஜிமெயில் லேபிளின் கீழ் மட்டுமே பயனர்கள் செய்திகளைத் தேட அனுமதிக்கிறது. அதன் அடிப்படையில் மட்டுமே முடிவுகளை வழங்கும். மேலும், பயனர்கள் ஜிமெயில் search bar இல் உள்ள search chips வசதி மூலம் label searches செய்துக்கொள்ள முடியும். லேபிள்கள் அம்சம் Android மற்றும் iOS சாதனங்களில் கிடைக்கிறது.
தொடர்புடைய முடிவுகள்
ஒட்டுமொத்த தேடல் அனுபவத்தை மேம்படுத்த தொடர்புடைய முடிவுகளை மட்டுமே இது காட்டும். தேடல் வினவல்களுக்கு எந்த முடிவுகளையும் தராது. இந்த அம்சம் இணையத்தில் மட்டுமே கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் கூகுள் நிறுவனம் Android 13 இன் வெளியீட்டை அறிவித்தது. பின்னர் 250 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர செயலில் உள்ள சாதனங்கள் Android Go மூலம் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.