மொபைல் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தில் ஐபோன் மாடல்களுக்கு மிகப்பெரிய மவுசு உள்ளது. காரணம் அதன் பிரத்யேகமான இயங்குதளம் என கூறப்பட்டாலும் , மற்றொரு புறம் அதன் வடிவமைப்பையும் ஒரு காரணமாக கூறலாம். பல நிறுவனங்கள் ஐபோனின் சில வசதிகளை தங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் புகுத்தி சந்தைப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஜியோனி நிறுவனம் தங்கள் புதிய வகை மொபைல்போனை அச்சு அசல் ஐபோன் 13 போன்ற தோற்றத்தில் உருவாக்கியுள்ளது. ஜியோனி ஜி13 ப்ரோ என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புதிய வகை மொபைல்போன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சீனாவில் அறிமுகமாகியுள்ளது. அதில் இருக்கும் வசதிகள் என்ன ? விலை எவ்வளவு என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
gionee G13 Pro ஆனது HarmonyOS ஐ கொண்டு இயங்குகிறது. திரையை பொருத்தவரையில் 19:9 விகிதத்துடன் 6.26-இன்ச் முழு-எச்டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. Unisoc T310 SoC மூலம் இயங்கும் gionee G13 Pro ஆனது 4GB + 32GB உள்ளீட்டு மெமரி வசதி , 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளீட்டு மெமரி வசதி என இரண்டு வசதிகளை கொண்டுள்ளது. கேமராவை பொருத்தவரையில் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, அதில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் இரண்டாம் நிலை மேக்ரோ சென்சார் கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வசதியை கொண்டுள்ளது. இது தவிர Gionee G13 Pro இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi, Bluetooth, USB Type-C மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட வசதிகளையும் கொண்டுள்ளது. எழுத்துரு மற்றும் ஐகான்களின் அளவை அதிகரிக்கும் வசதிகள் கொடுக்கப்பட்டிருப்பதால் இதனை இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. பேட்டரியை பொருத்தவரையில் 3,500mAh என்னும் சிறப்பான பேட்டரி வசதிகளை கொண்டுள்ளது.
இந்த புதிய ஜியோனி மொபைலின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் splitscreen என்னும் ஐபோனுக்கே உரித்தான வசதியை ஆதரிக்கிறது. இதன் மூலம் பயனாளர்கள் ஒரே நேரத்தில் விளையாடிக்கொண்டே , மெசேஜும் அனுப்ப முடியும்.இது தவிர Huawei இன் HMS சுற்றுச்சூழல் அமைப்பை ஆதரிக்கிறது. விலையை பொருத்தவரையில் இரண்டு வேரியண்டிற்கும் மாறுபாடு உள்ளது.Gionee G13 Pro அடிப்படை மாடலான 4GB + 32GB வசதி கொண்ட மொபைலானது சீனாவில் CNY 529 ( ரூ. 6,200) என்ற விலையிலும், 4GB + 128GB சேமிப்பு மாறுபாட்டின் விலை CNY 699 (தோராயமாக ரூ. 8,200) என்னும் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்னோ கிரிஸ்டல், சீ ப்ளூ மற்றும் ஸ்டார் பார்ட்டி பர்பில் என்னும் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.