அமெரிக்கா போன்ற நாட்டில், சம்பாதிப்பதே கவுரம். அங்கு அதிகம் சம்பாதிக்கும் நபர் என்பது எவ்வளவு பெரிய கவுரம்? ஆம்... அமெரிக்காவில் அதிக ஊதியம் பெறும் கூகுளின் செயல் அதிகாரி தான் சுந்தர் பிச்சை. அவருக்கு சுமார் 230 மில்லியன் டாலர் மதிப்புள்ள கூகுள் பங்குகள் தரப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் உள்ளது. ஒரு வருடத்திற்கு 200 மில்லியன் டாலர்கள் ஊதியமாக பெற்ற சுந்தரின் ஊதியம்,  இந்திய ரூபாயில், அதன் மதிப்பு ரூ.12838100000(முடிந்தால் கவுண்ட் செய்து கொள்ளுங்கள்) கோடி. பங்குகள் உயர்ந்த பிறகு அதுவே  2500 கோடியாக உயர்ந்தது. 



4


விமானம் ஏற முடியாதது அன்று... தனி விமானம் இன்று!


கரக்பூரில் பொறியியல் முடித்த பிறகு 1995ம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்டேன்போர்ட் பல்கலைகழகத்தில் உதவித்தொகையுடன் பொருளறிவியல் படிக்க அமெரிக்கா செல்ல சுந்தருக்கு வாய்ப்பு கிடைத்தது. விமானத்தில் பயணிக்க வேண்டும். அது தான் அவரது முதல் விமான பயணம். கொட்டு வாங்கினாலும் மோதிர விரலால் கொட்டு வாங்க வேண்டும் என்பார்களே அது போல தான். முதல் விமானப்பயணம், அதுவும் அமெரிக்காவிற்கு.  ஆனால் அதில் பயணிக்க அவருக்கு தேவைப்பட்டது, அவரது தந்தையின் ஓராண்டு ஊதியம். சிரமப்பட்டு தான், மகனை அமெரிக்கா அனுப்பினார் அவரது தந்தை. அதன் பின் தன் கல்வி அறிவை வளர்த்துக் கொண்டு ,உலகின் முன்னணி நிறுவனத்தில் முன்னணி பொறுப்பை பெற்ற சுந்தர் பிச்சை, இன்று தனி விமானத்தில் பறக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார், வளர்ந்திருக்கிறார் என்றால் அது அனைத்தும் அவரது உழைப்பு, முயற்சி, திறமை மட்டுமே! 




இரு அறையில் வசித்தவர்... இன்று...!


இந்தியாவில் இருந்து புறப்படும் அந்த நொடி வரை, சுந்தர் பிச்சையின் வீடு இரு அறைகளை கொண்ட சிறிய வீடு. சொந்தமாக டிவி, கார் எதுவும் இல்லாத ஒரு மிடில் கிளாஸ் வீடு அது. அது அன்று சாதாரண மாணவன் சுந்தர் பிச்சையின் வீடு. இன்று.... உலகை ஆண்டு கொண்டிருக்கும் கூகுளின் சிஇஓ அல்லவா... அமெரிக்காவின் லாஸ் அல்டாஸில் உள்ள சுந்தர் பிச்சையின் வீடு பிரபலமானது. சாதாரண வீட்டிற்கும் அந்த வீட்டிற்கும் ஒரு பொருத்தம் கூட இல்லை என்பார்கள். அந்த அளவிற்கு பிரமாண்டம் நிறைந்தது. அதிநவீன தொழில் நுட்பங்களும், அதீத வசதிகளும் நிறைந்த மாளிகை. மொத்தம் 5 பிரமாண்ட படுக்கை அறைகளை கொண்ட அந்த வீட்டில், டென்னீஸ் கோர்ட், குழந்தைகளுக்கான மினியேச்சர் கால்பந்து மைதானம் என சகல வசதிகளும் நிறைந்த வீட்டில் வசிக்கிறார். சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்புகளை கணக்கிட கால்குலேட்டர் திணறும், கம்யூட்டர் கதறும். இது என்ன முடிந்த கதையா... இன்னும் உழைக்கிறார்... ஊதியம் பெறுகிறார். அடுத்த பிறந்த நாள் வரும் போது, அது எத்தனை மில்லியனாக இருக்கும் எனத் தெரியாது. டாலர்கள் சுந்தரிடம் சரணடைந்திருக்கின்றன. ஆனாலும் துளி கூட அந்த பந்தா இல்லாதவர் என்பது தான் சுந்தரின் சிறப்பு.




பேராசை அற்ற பெருமை வாழ்வு


ஏற்கனவே குறிப்பிட்டது தான்.... சுந்தர் பிச்சைக்கு மைக்ரோசாப்ட், ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் எல்லாம் வலைவீசின. ஆனால் அவர் எதிலும் சிக்கவில்லை. இத்தனைக்கும் அதிக ஊதியம் பேசப்பட்டது. அவர் நினைத்திருந்தால், அவற்றை ஏற்று இன்னும் சம்பாதித்திருக்கலாம். சம்பாதிப்பதற்கான அம்சங்களும் அங்கு இருந்தன. ஆனால், கூகுள் மட்டும் தான் இலக்கு என்கிற நோக்கில் அவர் பயணித்தார். அதனால் பேராசைகளுக்கு இடம் தரவில்லை. இலக்கு எப்போதும் இன்பம் தரும், லாபம் தரும். அப்படி தான் இன்று கூகுள் என்கிற சாம்பிராஜ்யத்தில் மகுடம் சூடிய மன்னனாக உயர்ந்து நிற்கிறார் கூகுள் பிச்சை. இந்தியாவில் 10 பில்லியன் டாலர்களை கூகுள் முதலீடு செய்யப்போவதாக சமீபத்தில் அறிவித்தார் சுந்தர். ஏழ்மையில் இங்கிருந்து புறப்பட்டவர் தான்... இன்று இந்தியாவில் முதலீடு செய்யும் முடிவை அறிவிக்கிறார். இது தானே வளர்ச்சி.




முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல தலைவர்கள் சுந்தர் பிச்சையை வாழ்த்தியிருக்கிறார்கள். மெச்சியிருக்கிறார்கள். அனைத்துக்கும் தகுதியான சுந்தரின் தனி சர்க்கார் வெற்றி நடை போடட்டும். 


மேலும் படிக்க:


Sundar Pichai Birthday: உலகை இயக்கும் இணையத்தின் இதயம் சுந்தர் பிச்சை!


Sundar Pichai Birthday: பெர்த்டே பாய் சுந்தர் பிச்சையின் இன்னொரு உலகம் இது!