பப்ஜியை அடுத்து மிகவும் பிரபலமான ஃப்ரீ ஃபயர் உள்ளிட்ட 54 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூன் மாதம் 59 சீன செயலிகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் சில செயலிகளும் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.


2020-ம் ஆண்டு முதல் இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால், நாட்டின் இறையான்மையையும் பாதுகாப்பையும் காப்பாற்ற சீன செயலிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. இந்த பட்டியலில் அதிக பயனர்களை கொண்ட பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டது. அதனை அடுத்து, ஃப்ரீ பயர் விளையாட்டு கேமர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது. கடந்த ஆண்டு மட்டும், அதிக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் ஃப்ரீ ஃபயர் இடம் பெற்றிருக்கிறது. 



இந்நிலையில், இப்போது ஃப்ரீ ஃபயர் உள்ளிட்ட 54 சீன செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன. பியூட்டி கேமரா, டூயல் ஸ்பேஸ், ஃப்ரீ ஃபயர், ரியல் யூ, ஃபன் சேட் உள்ளிட்ட செயலிகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதனால், கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த செயலிகள் எடுக்கப்பட்டுள்ளன. பப்ஜியை அடுத்து கேமர்களின் மனதை வென்ற மற்றுமொரு செயலி இந்தியாவில் தடை செய்யப்படுவதால் இதே போன்று வேறொரு விளையாட்டு பிரபலமடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.






ஏற்கனவே தடைசெய்யப்பட்ட செயலிகளின் பெயர்களில் மாற்றங்கள் செய்து, வேறு நாட்டில் இருந்து அறிமுக செய்யப்பட்டு வருகிறது. இதனால், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு மீண்டும் இந்த தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண