அறிவியல் உலகில் எப்போதும் நம்முடைய விண்வெளி தொடர்பான ஆராய்ச்சியில் பல முக்கிய கண்டுபிடிப்புகள் எப்போதும் அதிக ஆர்வத்தை தூண்டும். அதிலும் அந்த கண்டுபிடிப்புகள் தொடர்பான படங்கள் வெளியாகும் போது அது பலரின் கவனத்தை பெரும். 


இந்நிலையில் நம்முடைய மில்கிவே கேலக்ஸியின் கருந்துளை(Black Hole) தொடர்பான முதல் படம் தற்போது வெளியாகியுள்ளது. கருந்துளை (BLACK HOLE) என்பது மிகபெரிய அண்ட வெளியில் மற்றும் வின்வெளியில்  காணப்படும்  சக்தி வாய்ந்த கண்ணுக்கு தெரியாத  வெற்றிடமாகும்.  இந்த கருந்துளை  அதிக ஈர்ப்பு விசை கொண்டது. எந்த அளவுக்கு என்றால்  இதனை கடந்து செல்லும் எந்த ஒரு ஒளியாக இருந்தாலும் அதைகூட தனக்குள் ஈர்த்துக் கொள்ளும் அளவிற்கு சக்தி வாய்ந்தது.


 






இந்த கருந்துளை தொடர்பாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பல ஆய்வுகளை செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய அறிவியல் கழகம் முதல் முறையாக கருந்துளை படத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பதிவில், “நம்முடை கருந்துளை. ஆராய்ச்சியாளர்கள் நம்முடைய மில்கிவே கேலக்ஸியிலுள்ள மிகப்பெரிய கருந்துளையின் முதல் படத்தை ஈவென்ட் ஹாரிசன் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது. 


இந்த கருந்துளைகள் சூரியனை விட 4 மில்லியன் மடங்கு அதிகமான எடையை கொண்டது. இது நம் பூமியிலிருந்து 26000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இந்த கருந்துளைக்கு சாகிடாரஸ்-ஏ என்று ஆராய்ச்சியாளர்கள் ஏற்கெனவே பெயர் வைத்துள்ளனர். அதாவது பூமியிலிருந்து இது 9.5 ட்ரில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மில்கிவே கேலக்ஸியில் சுமார் 100 பில்லியன் ஸ்டார்களுக்கு மேல் உள்ளன. இவை அனைத்தும் தன்னுடைய ஆயுட் காலம் முடிந்தவுடன் இந்த கருந்துளை பக்கம் ஈர்க்கப்படும் என்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். கருந்துளைகளில் இருக்கும் பூவி ஈர்ப்பு விசை மிகவும் பலமான ஒன்று. இதன்காரணமாக தான் இதற்குள் செல்லும் ஒளி கூட திரும்பி வெளியே வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண