ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களை ஃபேஸ்புக் புரொடக்ட் அம்சத்தை ஆன் செய்ய வலியுறுத்தி கடந்த மாதம் மெயில் அனுப்பியது. அவ்வாறு செய்யவில்லையென்றால் அவர்களுடைய கணக்கு முடக்கப்படும் என எச்சரித்திருந்தது. இந்நிலையில் இன்று முதல் இந்த முடக்கம் அமலுக்கு வந்ததாக பல ஃபேஸ்புக் பயனர்கள் தெரிவித்து வருகின்றனர். ஹேக்கர்களால் ஃபேஸ்புக் கணக்குகள் பாதிக்கப்படுவதை தடுக்க இந்த நடவடிக்கையை ஃபேஸ்புக் மேற்கொண்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளது. பயனர்கள் உடனே செட்டிங்ஸுக்கு சென்று தங்களுடைய ஃபேஸ்புக் புரொடக்ட் அம்சத்தை ஆன் செய்தால் மட்டுமே அவர்களால் உள் நுழைய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பேஸ்புக்கின் கருத்துப்படி, பேஸ்புக் ப்ரோடெக்ட் என்பது மனித உரிமைப் பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் போன்ற ஹேக்கர்களால் குறிவைக்கப்படக்கூடிய நபர்களுக்கான பாதுகாப்புத் திட்டமாகும்.



இது போன்ற நபர்கள் சமூகத்தின் அங்கமாக உள்ளனர். அவர்களின் பங்கே ஜனநாயக தேர்தல்களை செயல்படுத்தவும், அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளை பொறுப்புடன் நடத்தவும், மற்றும் உலகம் முழுவதும் மனித உரிமைகளை பாதுகாக்கவும் செய்கின்றன. அவர்கள்தான் ஹேக்கர்களால் அதிகம் குறிவைக்கப்படுகிறார்கள் என்று ஃபேஸ்புக் கூறுகிறது. Facebook Protect இந்த நபர்களுக்கு, டூ ஃபேக்டர் ஆதெண்டிகேஷன், ஹேக்கிங் அச்சுறுத்தல்களுக்கான கண்காணிப்பு போன்ற வலுவான பாதுகாப்புகளை தருகின்றது என்று Facebook கூறுகிறது. நிறுவனத்தின் கூற்று படி, டூ ஃபேக்டர் ஆதெண்டிகேஷன், குறிப்பாக தேர்ட் பார்ட்டி ஆப்கள் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் பிரச்சனைகள் வராமல் பயனர்களின் ஆன்லைன் கணக்குகளின் பாதுகாப்பை கணிசமாக மேம்படுத்துகிறது. Facebook முதன்முதலில் Facebook Protect ஐ 2018 இல் சோதித்தது. 2020 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக அதை உலகெங்கும் விரிவுபடுத்தியது.






ஃபேஸ்புக் நிறுவனம் அதன் உலகளாவிய விரிவாக்கத்தை செப்டம்பர் 2021 இல் தொடங்கியது. அப்போதிலிருந்து, 1.5 மில்லியனுக்கும் அதிகமான அக்கவுன்ட்கள் Facebook Protectஐ இயக்கியுள்ளன, அவற்றில் கிட்டத்தட்ட ஒன்பது லட்சத்து ஐம்பதாயிரம் கணக்குகள் டூ ஃபேக்டர் ஆதெண்டிகேஷனை புதிதாகப் பதிவு செய்துள்ளனர் என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. "நாங்கள் இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான பாதையில் இருக்கிறோம். இந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்கா, இந்தியா மற்றும் போர்ச்சுகல் உட்பட 50 நாடுகளில் இதை திட்டம் விரிவுப்படுத்தப்படும்" என்று நிறுவனம் டிசம்பர் 2021 இல் கூறியது. விரைவில் இதன்மூலம் நடைபெறும் ஹேக்குகள், தவறான செயல்பாடுகள் தடுக்கப்பட்டு, தகவல்கள் திருடப்படுவது குறையும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.