Facebook Instagram Down: உலகம் முழுவதும் மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளது.
இன்ஸ்டாகிராம், பேஸ்புக் சேவை:
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி வருகின்றன.
தகவலை பகிர்ந்து கொள்வதற்கான முதன்மை செயலியாக, வாட்ஸ்-அப், ட்விட்டருக்கு அடுத்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தொடர்ந்து நீடிப்பதற்கு மெட்டா நிறுவனம் வழங்கும், இந்த அடுத்தடுத்த அப்டேட்களும் முக்கிய காரணமாகும். அந்த வகையில்தான், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அடுத்ததாக, புதிய அப்டேட்களை அடுத்தடுத்து வழங்குகிறது.
முடங்கிபோன பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை?
இப்படியான சூழலில், உலகம் முழுவதும் 30 நிமிடங்களுக்கு மேலாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளது. பேஸ்புக் பக்கங்கள் லாக் ஆவுட் ஆகி, லாக்கின் செய்ய முடியாமல் பயனர்கள் அவதி அடைந்து வருகின்றனர். அதேபோல, இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மொத்தமாக செயல்படாமல் இருப்பதாக தெரிகிறது.
எனவே, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளதால் பயனர்கள் அவதி அடைந்துள்ளனர். இதனால், பல கேள்விகளை சமூக வலைதளங்களில் பயனர்கள் எழுப்பி வருகின்றனர். தொழில்நுட்ப காரணங்களால் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புலம்பித்தள்ளும் பயனர்கள்:
இது தொடர்பாக பயனர்கள் எக்ஸ் தளத்தில் மீம்ஸ் பதிவிட்டு, பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். #Facebookdown என்ற ஹேஷ்டேக்கையும் எக்ஸ் தளத்தில் பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
மார்க் ஜுக்கர்பெர்க் சொன்னது என்ன?
"இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் முடங்கியுள்ளது. என்ன காரணம்" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். மேலும், மார்க் ஜுக்கர்பெர்க்கின் புகைப்படத்தை பகிர்ந்து கலாய்த்து தள்ளி வருகின்றனர். இந்த நிலையில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் விரைவில் சரி செய்யப்படும் என்று மார்க் ஜுக்கர்பெர்க் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.
மீண்டும் செயல்பட்டது:
இதையடுத்து, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை அரை மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது. இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் செயல்படாததால் பயனாளர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.