Twitter (X) Update: X (டிவிட்டர்) தள பயனாளர்களுக்கு இரண்டு புதிய கட்டண சலுகைகளை வழங்குவதாக, அதன் உரிமையாளரான எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
X (டிவிட்டர்) பயனாளர்களுக்கான புதிய திட்டங்கள்:
X (டிவிட்டர்) தள பயனாளர்களுக்கு இரண்டு புதிய கட்டண சலுகைகளை வழங்குவதாக, அதன் உரிமையாளரான எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அவை பிரீமியம் + மற்றும் அடிப்படை என இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. பிரீமியம் + என்பது மிகப்பெரிய ரிப்ளை வழங்குவதற்கான அனுமதியை வழங்குகிறது. பயனாளரின் பதிவு மற்றும் பின்தொடர்பவர்களின் பதிவுகளை பார்க்கும் போது வரும் விளம்பரங்கள் தவிர்க்கப்படும். கிரியேட்டர்களுக்கான அனைத்து டூல்களுக்கும் அணுகல் வழங்கப்படும்.
அடிப்படை திட்டம் என்ன?
அடிப்படை திட்டம் சந்தாதாரர்களுக்கு நீல நிற டிக் குறியீடு வழங்கப்படாது. அதேநேரம், பயனர்கள் இடுகைகளைத் திருத்தவும், நீண்ட உரை மற்றும் வீடியோக்களை இடுகையிடவும் அனுமதிக்கிறது. சற்று கூடுதலான ரிப்ளை வழங்கவும் பயனாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இது விளம்பரங்களின் எண்ணிக்கையை குறைக்காது மற்றும் X இன் மீடியா ஸ்டுடியோவிற்கு அணுகலை வழங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
X (டிவிட்டர்) தள அப்டேட்:
அதன்படி, பிரீமியம் + சந்ததாரர்களிடம் 16 அமெரிக்க டாலர்களும், அடிப்படை பிரிவில் 3 அமெரிக்க டாலர்களும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சந்தாதாரர்கள் மூலம் நிறுவனத்திற்கான வருவாயை ஊக்குவிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடரும் அப்டேட்கள்:
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் X எனப்படும் டிவிட்டர் தளத்தை, 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். அது முதல் டிவிட்டர் மூலம் வருவாயை உயர்த்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அடுத்தடுத்து பல்வேறு அப்டேட்களையும் வழங்குகிறார். அண்மையில்,. லைவ்ஸ்ட்ரீமிங், வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகள், கட்டண அடிப்படையில் டிக் குறியீடு போன்ற புதிய அப்டேட்களை வழங்கினார். வங்கிச் சேவைகளையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். அவ்வப்போது, பயனாளர்களாள் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை கருத்தில் கொண்டும், பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எலான் மஸ்க் பதிலளித்து வருகிறார்.