Twitter X Feature: எக்ஸ் தளத்தில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான வசதியை கொண்டு வர உள்ளதாக  எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார். 


ட்விட்டரில் குவியும் மாற்றங்கள்:


உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்தே, ட்விட்டரில் பல மாற்றங்களை செய்து வருகிறார். நிறுவனத்தின் அடிப்படை தத்துவத்தையே மாற்றியமைத்து,  காசு கட்டினால்தான் ப்ளூ டிக் என்று தொடங்கி ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் 10,000 வார்த்தைகள் வரை ட்வீட் செய்யலாம் என்பது வரை பல அப்டேட்களை குவித்து தள்ளினார். கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் அடுத்தடுத்த அப்டேட்கள் அமல்படுத்தப்பட்டன.  


அந்த வரிசையில் தற்போது, பல ஆண்டுகளாக ட்விட்டரின் பிராண்ட் அடையாளமாக இருந்துவரும் குருவி லோகோவை மாற்றினார் எலான் மஸ்க். அதாவது, 'எக்ஸ்' (X) என்று லோகோவையும், அதன் பெயரையும் மாற்றினார் எலான் மஸ்க். இந்த லோகோ மற்றும் பெயர் மாற்றத்தை தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் அதிரடியாக கொண்டு வரப்பட உள்ளதாக அவ்வவ்போது தகவல்கள் வரும்.  அதன்படி, தற்போது எக்ஸ் தளத்தில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான வசதியை கொண்டு வர உள்ளதாக தெரிவித்திருக்கிறார். 


ஆல் இன் ஆலாக மாறும் எக்ஸ்:


இதற்கான அறிவிப்பை ஜூலை மாதத்திலேயே எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். அதாவது, 'எக்ஸ்' ஆப்பை அனைத்து பயன்பாட்டிற்குமான ஒரே ஒரு செயலியாக மாற்ற எலான் மஸ்க் முடிவு செய்திருக்கிறார். அதன்படி, இந்த 'எக்ஸ்' ஆப் மூலம் சாட் செய்தல், போஸ்ட் போடுதல், உணவுகளை ஆர்டர் செய்தல், பணப்பரிமாற்றம் மேற்கொள்ளுதல் போன்ற சேவைகளை கொண்டு வர முடிவு செய்துள்ளார் மஸ்க்.  கிட்டத்தட்ட இந்த  எக்ஸ் ஆப் ஏஐ (Artificial Intelligence) மூலம் செயல்படும் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற அம்சத்தை போல் சீனாவில் வீ சாட் (WECHAT) என்ற ஆப் உள்ளது. இதற்கு சீனாவில் 1 பில்லியன் பயனர்கள் உள்ளனர். 


"அடுத்த ஆண்டில் பணப்பரிமாற்றம் மேற்கொள்ளலாம்”


இது சீனாவில் அனைத்து பயன்பாட்டிற்குமான ஒரே செயலியாக இருக்கிறது. அதேபோன்ற செயலியாக 'எக்ஸ்' ஆப்பை எலான் மஸ்க் மாற்ற முடிவு செய்து, அதற்கான பணியிலும் தீவிரமாக இறங்கி இருக்கிறார். அதன் ஒரு பகுதியாக எக்ஸ் தளத்தில் பணப்பரிமாற்றம் வசதியை அறிமுகப்படுத்தும்  முயற்சியில்  எலான் மஸ்க் செய்து வருகிறார்.


பணப்பரிமாற்றம் செய்யும் வசதி எக்ஸ் தளத்தில் அடுத்த ஆண்டு (2024) இறுதிக்குள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  வங்கிக் கணக்கு இல்லாமலேயே பணம் பரிமாற்றத்தை மேற்கொள்ளும்படியாக வசதி வர உள்ளதாக தெரிகிறது.  இந்த வசதி அடுத்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று சொல்லப்படுகிறது. 




மேலும் படிக்க


Chandrayaan 3: நிலவில் புழுதி பறக்க தரையிறங்கிய சந்திரயான் 3! இத்தனை டன்னா? இஸ்ரோ தந்த லேட்டஸ்ட் அப்டேட்