நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான்-3 விண்கலத்தை ஜூலை 14-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. 40 நாட்களில் பல ஆயிரம் கிலோமீட்டர்களை கடந்து திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி தரையிறங்கியது சந்திரயான் 3 விண்கலம்.


சந்திரயான் 3:


முக்கியமாக நிலவின் தென்துருவத்தில் மேற்பரப்பில் சில கனிமங்கள் இருப்பதாக உறுதி செய்துள்ளது. அதாவது, நிலவில்  சல்பர், அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டேனியம், மாங்கனீஸ், சிலிக்கான், ஆக்ஸிஜன் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை ரோவரில் உள்ள எல்ஐபிஎஸ் கருவி கண்டுபிடித்திருக்கிறது.


வெப்ப கடத்துத்திறன் மற்றும் வெப்பநிலையை தெரிந்து கொள்வதற்காக ChaSTE கருவியும் தரையிறங்கும் இடத்தை சுற்றி நில அதிர்வு தொடர்பாக ஆராய்வதற்காக ILSA கருவியும் மின் திறன் கொண்ட துகள்களை பற்றி ஆராய LP கருவியும் விக்ரம் லேண்டரில் அனுப்பப்பட்டுள்ளன.  விண்கலத்தில் அனுப்பப்பட்ட ரோவர், 9 நாட்கள் நிலவை சுற்றி வலம் வந்தது. அதனையடுத்து 15 நாட்கள் இரவு என்பதால் ரோவர் மற்றும் லேண்டரின் செயல்பாடுகள் செயலிழந்தது. இதனைத்தொடர்ந்து செப்டம்பர் 23 ஆம் தேதி சூரியனின் ஒளி மீண்டும் நிலவு மீது படத்தொடங்கியது. இதனால் மீண்டும் ரோவர் மற்றும் லேண்டரை எழுப்பும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டது.


சிக்னல் தராத சந்திரயான் 3:


அதாவது சூரிய ஒளி விழத்தொடங்கியதும் ஒரு குறிப்பட்ட அளவு வெப்பநிலை வந்த பின் சந்திரயான் 3 விண்கலத்தில் இருக்கும் லேண்டர் மற்றும் ரோவரை எழுப்பும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் லேண்டர் மற்றும் ரோவர் கருவிகளிலிருந்து எந்த சிக்னலும் கிடைக்கவில்லை என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில் heat generater கருவி இல்லாததன் காரணத்தால் தட்டி எழுப்பும் பணிகள் வெற்றியடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக பூமியில் இருந்து அனுப்பப்பட்ட சிக்னல்களுக்கு சந்திரயான் 3 வின்கலத்தில் இருந்து பதில் சிக்னலும் கிடைக்காததால் எழுப்பப்படவில்லை.






இந்நிலையில், இன்று இஸ்ரோ தரப்பில் புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் போது, விக்ரம் லேண்டரில் இருந்து 108.4 m²  பரப்பளவில் சுமார் 2.06 டன் நிலவில் மேற்பரப்பில் இருக்கும் epiregolith  எனப்படும் மண் சிதறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. இந்த தரவு வைத்து அடுத்த முறை நிலவுக்கு விண்கலம் அனுப்பினால் நிலவில் இருக்கும் புவியீர்ப்பு விசைக்கு ஏற்றவாறு விண்கலத்தின் வேகத்தை கட்டுப்படுத்தி தரையிறக்க பயனுள்ளதாக இருக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.


'ஆளுநர் மாளிகை புகாரில் உண்மையில்லை' கருக்கா வினோத் சிசிடிவி காட்சியை வெளியிட்ட காவல்துறை


CM MK Stalin Letter: நீட் விலக்கு மசோதாவிற்கு உடனடி ஒப்புதல் அளியுங்கள்: குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்திய முதல்வர் ஸ்டாலின்!