உலகப் பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் மீண்டும் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த இரண்டு நாளுக்கு முன்பு முதலிடத்தில் இருந்தவர் சொத்து மதிப்பினை இழந்து இரண்டாவது இடத்தில் உள்ளார். 


எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 7.71 பில்லியன் டாலர் அளவுக்கு குறைந்துள்ளது. தற்போது, எலான் மஸ்கின் நிகர சொத்துமதிப்பு 176 பில்லியன் டாலராக உள்ளது. 


ப்ளூம்பர்க்கின் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் அறிக்கையின்படி, பிரெஞ்ச் தொழிலதிபர் பெர்நார்ட் அர்னால்ட் முதலிட்டத்தில் உள்ளார். இந்தியாவைச் சேர்ந்த கெளதவும் அதானி 28 வது இடத்தில் உள்ளார். எலான் மஸ்கின் நிகரா சொத்துமதிப்பு 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு குறைந்து 176 பில்லியன் டாலர்களாக இருந்தது.


எலான் மஸ்க் முதலிடம்:


கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, எலான் மஸ்க் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இரண்டு மாதங்களுக்கு பிறகு  முதலிடத்தைப் பிடித்தார். கடந்த டிசம்பர் மாதம் பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் என்பவர் முதலிடத்தில் இருந்தார்.


இரண்டு நாட்களுக்கு முன்பு, தற்போது டெஸ்லா நிறுவனத்தின் பங்குமதிப்பு 100 சதவீதம் அதிகரித்தது. எலான் மஸ்க் மீண்டும் முதல் இடம் பிடித்தார். லூயி வுட்டான் (LVMH Moet Hennessy Louis Vuitton) நிறுவனத்தின் சிஇஓ பெர்னார்ட் அர்னால்டின் சொத்து மதிப்பு 185.3 பில்லியன் டாலராகவும், எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 187 பில்லியன் டாலராகவும் இருந்தது.


48 மணி நேரத்தில் இரண்டாவது இடம் 


எலான் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு 187 பில்லியனிலிருந்து 176 பில்லியன் டாலர்களாக குறைந்தது. இதனால், எலான் மஸ்க் இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.


டிவிட்டரும் எலாம் மஸ்க்-வும்


எலான் மஸ்க் இந்திய மதிப்பில் ரூ.3.5 லட்சம் கோடிக்கு டிவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கினார்.  செலவுகளை குறைக்க வேண்டும் என்று எலான் மஸ்க் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் செயல்பட்டு வந்த 3 ட்விட்டர் அலுவலகங்களில் 2 அலுவலகங்களை எலான் மஸ்க் மூடி விட்டார். இந்நிலையில் இருந்த 2000 பேரிலும் 200 பேரை நேற்றோடு நீக்கிவிட்டார். இதேநிலை தொடர்ந்தால் ட்விட்டர் சமூக வலைதளமாக நீடிக்குமா என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


டிவிட்டர் பணிநீக்கம்’


ட்விட்டர் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் புதிதாக 200 பேரை வேலையைவிட்டு நீக்கியுள்ளார். இதன் மூலம் எஞ்சியிருக்கும் ஊழியர்களில் 10 சதவீதம் பேரை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்துள்ளார். எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவதற்கு முன்னர் அதில் 7500 ஊழியர்கள் இருந்தனர். பின்னர் தொடர்ந்து பணி நீக்க நடவடிக்கைகளை அவர் சரமாரியாக கட்டவிழ்த்தார். இதனால் ட்விட்டரின் ஊழியர் பலம் வெறும் 2000 ஆனது. தற்போது கடந்த சனிக்கிழமையன்று அதிலும் 10 சதவீதம் பேரை அவர் பணி நீக்கம் செய்துள்ளார். இது ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.