உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் வைரஸ் தாக்கியிருக்கலாம் என்று அஞ்சுகிறீர்களா எளிதான சில சோதனைகள் மூலம் அதைக் கண்டுபிடித்துவிடலாம். அதேபோல் ஈஸியான சில டிப்ஸ் மூலம் வைரஸ் வராமலும் தடுக்கலாம்.


ஸ்மார்ட் ஃபோன் இல்லாவிட்டால் வலதுகை உடைந்தது போல் உணரும் அளவுக்கு அது நம் வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது. பசித்தால் ஒரு ஆப்பில் ஆர்டர், மருந்து வேண்டுமா ஒரு ஆப், பணப்பரிவர்த்தனையா கூகுள் பே, பேடிஎம் உள்ளிட்ட ஆப்கள், டிக்கெட் புக்கிங் தொடங்கி மேட்ரிமோனி வரை எல்லாம் தொடுதிரையில் விரல் நுணியில் என்று நம்மை நாம் பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டோம். கொரோனா ஊரடங்கு இந்தப் பழக்கவழக்கத்தை குழந்தைகள் மீதும் திணித்துவிட்டது. வீட்டுப்பாடம் எழுதக்கூட ஒரு ஆப் என்றாகிவிட்ட காலம் இது. ஒரு சிறை ஃபோனில் இத்தனை ஆப்களை வைத்துக் கொள்ளும்போது சில நேரம் அன்வெரிஃபைட் ஆப்களும் புகுந்துவிட வாய்ப்புள்ளது.


அப்படி நாம் பதிவிறக்கம் செய்யும் அன்வெரிட்ஃபைட் ஆப்களால் தான் ஃபோனுக்கு சிக்கல் வருகிறது. அத்தகைய ஆப்களுடன் வைரஸும் வந்திறங்கிவிடுகிறது.


 




ஹேக்கர்களின் ஈஸி டார்கெட்:


ஸ்மார்ட்ஃபோனில் பணப்பரிவர்த்தனை செய்யும் நபர்களை தான் ஹேக்கர்கள் ஈஸி டார்கெட்டாகக் கருதுகிறார்கள். அதுவும் ஸ்மார்ட் ஃபோனிலேயே கடவுச்சொல் முதல் அத்தனையையும் ஃபோனிலேயே ஸ்டோர் செய்பவர்களாக நீங்கள், நீங்கள் தான் மிக எளிய டார்கெட்.


உங்கள் ஸ்மார்ட் ஃபோனுக்கு அன்றாடம் லோன் வேண்டுமா, சம்பள முன்பணம் வேண்டுமா, உங்களுக்கு க்ரிப்டோ கரன்ஸி கிடைத்திருக்கிறது அதைப் பெற இதைச் செய்யுங்கள் என்று பல லிங்குகள் மெசேஜில், வாட்ஸ் அப்பில் வரலாம். அவற்றை நீங்கள் கிளிக் செய்யாமல் இருப்பதே நலம். அப்படி கிளிக் செய்துவிட்டால் போதும் உங்கள் ஃபோனுக்கு இனாமாக வைரஸ் வந்துவிடும். அப்படி வைரஸ் வராமல் தற்காத்துக் கொள்ள எளிய வழிமுறைகள் சொல்கிறோம் கேளுங்கள்.


சில அடிப்படையான எளிமையான நடைமுறைகளைப் பின்பற்றினாலே போதும் ஃபோனை பாதுகாத்துக் கொள்ளலாம். பிரசவுரில் இருந்து தேவையற்ற ஆப்களை டவுன்லோட் செய்யாதீர்கள். எப்போதுமே கூகுள் ப்ளேஸ்டோரில் வெரிஃபைட் ஆப்களை மட்டுமே பதிவிறக்கம் செய்யுங்கள். அப்படியே ப்ளேஸ்டோரில் டவுன்லோட் செய்தாலும் கூட இன்ஸ்டால் செய்யும்போது அது கேட்கும் அனைத்திற்கும் அனுமதி கொடுக்கக்கூடாது. 


1. உங்கள் செல்போனில், ப்ரீமியம் பயன்பாட்டுக்காக உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படும். அப்படி செய்யப்பட்டால் வைரஸ் பாய்ந்துள்ளது. அதாவது ஹேக் செய்யப்பட்டிருக்கிறது.
2. தேவையில்லாமல் அதிகமான விளம்பரங்கள் ஃபோனில் வந்தால், விளம்பரம் தொடர்பான ட்ரோஜன் அல்லது வைரஸ் செல்போனுக்குள் வந்திருக்கலாம்.
3. உங்கள் ஸ்மார்ட்ஃபோனை பயன்படுத்தியே உங்களின் தொடர்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு மெசேஜ் செல்லும். அதன்மூலம் அவர்களும் பாதிக்கப்படுவர்.
4. உங்கள் ஃபோன் அடிக்கடி ஹேங் ஆகும்.
5. விரைவில் டேட்டா தீர்ந்தாலும் கூட உங்கள் ஃபோனில் வைரஸ் இருக்கிறது என்றே அர்த்தம்.
6. உங்கள் ஃபோன் சூடாகும், பேட்டரி டவுன் ஆவதும் கூட வைரஸ் இருப்பதற்கான அறிகுறியே.


அளவாக, உஷாராக ஃபோனைப் பயன்படுத்தினால் அது நமக்கான சாதனம். இல்லாவிட்டால் அது நம்மை ஆளும் சாதனம்.