கடந்த 2018 ஆம் ஆண்டு வாஷிங்டன் பகுதியில் உள்ள சீட்டல் என்ற நகரத்தில் ,  அமேசான் ஆளில்லாத மளிகை கடை ஒன்றை தொடங்கியிருந்தது. அப்போது எல்லோரும் அதை வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் பார்த்தனர். ஆனால் அமேசானுக்கு அன்றே தெரிந்திருந்தது எதிர்காலம் இப்படியாகத்தான் இருக்க போகி்றது என்று. அந்த வரிசையில்  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என அழைக்கப்படும் துபாயில், கடந்த திங்கள் கிழமையன்று தானியங்கி சூப்பர் மார்கெட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். பிரபல துபாய் மாலில் உள்ள கேரிஃபோர் என அழைக்கப்படும் அந்த மினி சூப்பர் மார்க்கெட்டில் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் போன்ற 1300க்கும் மேற்ப்பட்ட  பொருட்கள் கிடைக்கின்றன. இந்த கடைக்குள் நுழைய வேண்டும் என்றால் கேரிஃபோர் கடையின் பிரத்யேக செயலியை பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த செயலி இருந்தால் மட்டுமே நீங்கள் கடைக்குள் அனுமதிக்கப்படுவீர்கள்  உள்ளே நுழையும் பொழுது மூடியிருக்கும் கதவுகளுக்கு அருகில் கொடுக்கப்பட்டிருக்கும் , கியூ.ஆர் கோட் ரீடரில், உங்கள் மொபைல் போன் செயலியில் வரும் கியூ.ஆர் கோடை காண்பிக்க வேண்டும் , பின்னர் கதவுகள் தானாக திறந்து பின்னர் மூடிக்கொள்ளும். 




தற்போது கடைக்குள் சென்று வாடிக்கையாளர்கள் எடுக்கும் பொருட்கள் மற்றும் அதன் விலைகள் கேமராக்கள் மற்றும் சென்சார் மூலம் கண்காணிக்கப்பட்டு கணக்கிட படுவதாக கூறப்படுகிறது. இதற்காக கடைகளில் கிட்டத்தட்ட  100 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.மற்றும் ஏராளமான சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறும் கதவு அருகில் வரும்போது , செயலியில் முன்னதாக இணைக்கப்பட்ட உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் ஆட்டோமேட்டிக்காக டிடைக்ட் செய்யப்பட்டு கதவுகள் திறந்துவிடும்வாடிக்கையாளர் எந்த பொருளையும் எடுக்காமல் திரும்பிவிட்டால் அவருக்கும் கதவுகள் தானாக திறந்துக்கொள்ளும். இவை அனைத்தும் நொடிப்பொழுதில் நிகழ்கின்றன. அதன் பிறகு கேரிஃபோர்  செயலியின் வாயிலாக வாங்கிய பொருட்களுக்கான பில்லினை பெற முடியும். ஒருவேளை உங்களிடம் போதுமான பேலன்ஸ் இல்லாமல் பொருட்களை எடுத்து வெளியேற விரும்பினால் exit கதவுகள் திறக்கப்படாது.




எதிர்காலம் முற்றிலுமாக ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜன்ஸ், முற்றிலும் தொழில்நுட்பமயமாக்கப்பட்ட கடைகள் என்றுதான் இருக்க போகிறது, எனவேதான் இது போன்ற தானியங்க அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க விரும்பினோம். மேலும் இங்குள்ள கேமராக்கள் எங்கள் வாடிக்கையாளர்களின் முகங்களை சேமிக்காது அவர்களின் தனியுரிமையை மதிக்கும் வகையிலும் இதனை உருவாக்கியுள்ளோம். என இந்த கடையின் உரிமையாளர் மஜித் அல் ஃபுட்டைம்( Majid Al Futtaim) தெரிவித்துள்ளார். கேரிஃபோர் உலக புகழ்பெற்ற ஒரு நிறுவனம் . பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் தகவலின்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிக கிளைகளை கொண்ட நிறுவனமாக  கேரிஃபோர்  அறியப்படுகிறது.