மத்திய அரசின் சார்பில் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் 12 குறியீட்டு அடையாள அட்டை ஆதார் அட்டை ஆகும். இந்த அட்டையை மத்திய அரசின் நிதியுதவி திட்டங்கள் மற்றும் பான்கார்டு சேவைகள் ஆகியவை பெறுவதற்கு பயன்படுகிறது. எனவே இந்த அட்டையில் உள்ள விவரங்கள் சரியாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. இந்தச் சூழலில் ஆதார் கார்டு விவரங்களை எப்படி சரிபார்ப்பது? இணைய வழியில் சரிபார்க்க முடியுமா?


ஆதார் சரிபார்ப்பு என்றால் என்ன?


ஆதார் அட்டையில் ஒருவரின் பெயர்,முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட சில முக்கியம் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த முக்கியமான தகவல் அனைத்தும் 12 இலக்க எண்ண கொண்டு தான் பதிவிடப்பட்டிருக்கும். ஆகவே இந்த 12 இலக்க எண்ணில் சரியான தகவல்தான் பதிவாகி உள்ளதா என்பதை சரிபார்ப்பதே ஆதார் சரிபார்ப்பு ஆகும்.  ஏனென்றால் இது ஒரு அடையாள அட்டையாக பல முக்கியமான இடங்களில் பயன்படுகிறது. அந்த சமயத்தில் ஆதார் தகவல் தவறாக இருந்தால் நமக்கு சில நிதியுதவி உள்ளிட்ட விஷயங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகும். ஆகவே ஆதார் விவரங்களை சரிபார்த்து கொள்வது நல்லது. 




ஆதார் விவரங்களை இணையத்தில் சரிபார்ப்பது எப்படி?


UIDAIயின் இணையதளத்தில் ஆதார் கார்டு விண்ணப்பிக்க முடியும். அதே இணையதளத்தில் ஏற்கெனவே உள்ள ஆதார் விவரங்களை சரி பார்க்க முடியும். இதற்கு முதலில், 



  • www.uidai.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 

  • அங்கு ஆதார் சேவைகள் Aadhar services என்பதில் ஆதார் சரிபார்ப்பு Aadhar Verification ஐ தேர்வு செய்ய வேண்டும். 

  • அதன்பின்பு வரும் இடத்தில் 12 இலக்க ஆதார் எண் மற்றும் அந்த செக்யூரிட்டி கோர்ட் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.

  • பதிவு செய்த பின்பு verify என்பதை கிளிக் செய்ய வேண்டும். 

  • அப்போது இந்த 12 இலக்க எண்ணில் பதிவாகியுள்ள மொபைல் எண், மாநிலம் மற்றும் அவரின் வயது ஆகியவை வரும். 


 





  • இது சரியாக இருந்தால் உங்களுடைய ஆதார் கார்டு விவரம் சரியான 12 இலக்க எண்ணுடன் பொருந்து உள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 

  • அது ஒரு வேளை தவறாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக இந்த தளத்தில் புகாரை கொடுத்து உங்களுடைய சரியான ஆதார் எண் மற்றும் தகவலை நீங்கள் பெற முடியும்.


இவ்வாறு வீட்டில் இருந்த படியே நீங்கள் எளிதாக ஆதார் சரிபார்ப்பை இணையதளம் வாயிலாக எளிதில் செய்து முடிக்கலாம். இந்த மொத்த நடைமுறையும் வெறும் 10-15 நிமிடங்களில் முடிந்துவிடும். ஆகவே இதை வைத்து ஆதாரை சரிபார்த்து கொள்வது நல்லது. 


மேலும் படிக்க:  பான்-ஆதார் இணைப்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது தெரியுமா? விவரமா தெரிஞ்சுக்கோங்க!