மத்திய அரசு கடந்த ஆண்டு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் அனைவரும் இணைக்க வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்திருந்தது. அதன்படி கடந்த மார்ச் 31ஆம் தேதி அதற்கு கடைசி நாளாக இருந்தது. எனினும் நாட்டில் அப்போது நிலவிய கொரோனா சூழல் காரணமாக இந்த காலக்கெடு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் அந்த காலக்கெடு முடிய இன்னும் 16 நாட்களே உள்ளது. 


இந்நிலையில் மத்திய அரசு கூறிய படி இந்த இரண்டையும் எதற்காக இணைக்க வேண்டும்? இவற்றை இணைக்காமல் விட்டால் என்ன ஆகும்?


எதற்காக இணைக்க வேண்டும்?


வருமானவரித்துறையின் தரவுகளின்படி பல போலியான பான் கார்டுகள் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை கண்டறிய வருமானவரித்துறை பான் கார்டு உடன் ஆதார் கார்டை இணைக்க திட்டமிட்டது. அதன்படி பான்கார்டு உடன் ஆதார் கார்டு இணைக்கபடவில்லை என்றால் அந்த பான் கார்டு செல்லாமல் போகும் என்ற முடிவை வருமான வரித்துறை எடுத்துள்ளது. ஒரு குறிப்பிட அளவிற்கு மேல் பண பரிவர்த்தனை செய்யும் போது பான் கார்டு கட்டாயம் வைத்திருக்க வேண்டும். எனவே இந்த முறை மூலம் அதையும் வருமான வரித்துறை கண்காணிக்க திட்டமிட்டது. ஆகவே பான் கார்டு உடன் ஆதாரை இணை வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. 




பான்-ஆதார் இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும்?


இவ்வாறு வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் பான் மற்றும் ஆதார் கார்டை இணைக்கவில்லை என்றால் உங்களுடைய பான் கார்டு ரத்து செய்யப்படும். அத்துடன் நீங்கள் மீண்டும் புதிதாக பான் கார்டு விண்ணப்பிக்கும் போது ஆயிரம் ரூபாய் அபராதமாக வாங்கப்படும். மேலும் உங்களுடைய வங்கி பரிவர்த்தனை, முதலீடுகள், பங்குச் சந்தை பரிவரித்தனைகள் ஆகிய அனைத்தும் தடைப்படும். ஏனென்றால் இவை அனைத்திற்கும் kYC முறையை பூர்த்தி செய்ய பான் கார்டு கட்டாயம். அது செயல் இலக்கும் பட்சத்தில் இவை அனைத்தையும் நீங்கள் பயன்படுத்த சிக்கல் ஏற்படும். 


பான்-ஆதார் இணைக்கவில்லை என்றால் முதலீடுகள் எப்படி தடைபடும்?


இந்தியாவில் முதலீடுகள் உள்ளிட்டவற்றை செய்வதற்கு KYC முறையை பூர்த்தி செய்வது கட்டாயம். அதற்கு பான் கார்டு ஒரு முக்கியமான ஒன்று. அந்தப் பான் கார்டு செயல் இழந்து விட்டால் உங்களுடைய KYC ரத்தாகும். இதன் காரணமாக நீங்கள் முதலீடுகள், பங்குச் சந்தையில் பங்குகள் வாங்க விற்க ஆகியவை செய்ய முடியாது. மேலும் வங்கி கணக்குகளில் செய்துள்ள முதலீடுகளுக்கு டிடிஎஸ்(TDS) எனப்படும் வரி இயல்பான 10 சதவிகித்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக எடுக்கப்படும். இது நமக்கு பெரிய நஷ்டத்தை தரும். மேலும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலிருந்து பணம் எடுக்க மற்றும் போடுவும் பான் கார்டு தேவைப்படும் என்பதால் அந்த விஷயத்தை நம்மால் செய்ய முடியாமல் போகும். 


மேலும் படிக்க:Gold Silver Price Today: வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை குறைந்தது