இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஸ்ட்ரீமிங் சேவையில் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பயனர்கள் தங்கள் கணக்குகளை அணுகவோ அல்லது ஸ்ட்ரீம் செய்யவோ முடியவில்லை என்று சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்
இன்று மதியம் 12:35 மணியளவில் இந்திய நேரப்படி தொடங்கிய இந்த பிரச்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள இணையதளம் மற்றும் ஸ்மார்ட் டிவி பயனர்களை பாதித்துள்ளது.
இதையும் படிங்க: இந்த கேள்வியை விஜயிடம்தான் கேட்க வேண்டும். எங்களிடம் கேட்கக் கூடாது - சீறிய பிரேமலதா
மொபைல் பயனர்கள் பாதிக்கப்படவில்லை
ஆனால் வலை மற்றும் ஸ்மார்ட் டிவி பயனர்கள் மட்டுமே இந்த ஸ்ட்ரீமிங் செய்தவதில் சிரம்ம உள்ளது என்றும் அதே வேளையில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் செயலி செயல்பாட்டில் உள்ளது. இந்த தொழில்நுட்ப கோளாறில், சில சாதனங்களில் தளத்தை அணுகக்கூடியதாக இருந்தாலும், மற்றவர்களுக்கு முழுமையாக அணுக முடியாத சூழல் நிலை உள்ளது.
இந்தியா vs இங்கிலாந்து:
இந்த நிலையில் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியை ஹாட் ஸ்டாரில் கமெண்ட்ரியை ஹிந்தியில் மட்டுமே காண முடிவதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்.
இன்னும் அதிகாரப்பூர்வ பதில் இல்லை
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இதுவரை செயலிழப்புக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை அல்லது இந்த கோளாறு எப்போது சரி செய்யப்படும் என்று தகவல் தெரிய வில்லை. ஆனால் ஹாட் ஸ்டார் நிறுவனம் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுப்பட்டு வருகினறனர்