பாசில் ஜோசப்
மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரம் பாசில் ஜோசப். டொவினோ தாமஸ் நடித்த மின்னல் முரளி படத்தில் இயக்குநராக கவனமீர்த்தார். தற்போது அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். பாசில் ஜோசப் கடைசியாக நடித்து வெளியான சூக்ஷமதர்ஷினி படம் தமிழ் மலையாளம் என இரு தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது. தற்போது திரையரங்கில் வெளியாகியுள்ள பொன்மேன் படமும் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
சூர்யா 47
பாசில் ஜோசப் இந்தியில் ரன்வீர் சிங் வைத்து சக்திமான் தொடரை படமாக இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலும் சூர்யாவின் 47 ஆவது படத்தை இவர் இயக்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் வெளியானது முதல் சூர்யா ரசிகர்களின் கண்பார்வையில் இருக்கிறார் பாசில் ஃஜோசப். மேலும் அவரே ஒரு முரட்டு சூர்யா ரசிகர் என்று தெரியவந்துள்ளது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியளித்துள்ளது
பாசில் ஜோசப் காலேஜில் செய்த சம்பவம்
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாசில் ஜோசப் தனது கல்லூரி காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை குறிப்பிட்டு சொன்னார். எனது கல்லூரியில் நான் ஆர்ட்ஸ் படிக்கும் மாணவர்களின் செகரட்ரியாக இருந்தேன். ஒவ்வொரு இண்டர் காலேஜ் போட்டியிலும் எப்படியாவது எனது கல்லூரியை பரிசு வாங்கவைத்து விட வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாக இருந்தது. அதற்காக நாங்கள் எந்த எல்லை வரையும் செல்வோம். ஒரு முறை எப்படியாவது மூன்றாவது இடத்தையாவது பிடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு ஒரு கதை சொல்லும் போட்டியில் கலந்துகொண்டோம். எங்களைத் தவிர்த்து இன்னும் ஒரு காலேஜ் மட்டுமே இந்த போட்டியில் கலந்துகொண்டது . நான் என்னுடன் இரண்டு இசைக்கலைஞர்கலை அழைத்து மேடைக்கு சென்றுவிட்டேன். சூர்யாவின் வாரணம் ஆயிரம் கதையை முழுவதுமாக வர்களிடம் சொன்னேன். சூர்யா மேகனாவைப் பார்த்ததும் காதலில் விழுவதை பாட்டுடன் நடித்து காட்டினேன் " என பாசில் ஜோசப் தெரிவித்தார்
ரெட்ரோ
சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ரெட்ரோ படத்தில் நடித்துள்ளார். பூஜா ஹெக்டே , கருணாகரன் , ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.