உலகின் நம்பர் ஒன் லேப்டாப் மற்றும்  கணினி நிறுவனம் Dell. கிட்டத்தட்ட 37 வருடங்களாக லேப்டாப் மற்றும் கணினி உற்பத்தியில் கோலோச்சி வருகிறது  . இந்நிலையில் தனியார் அமைப்பு மூலம் சைபர் பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் டெல் நிறுவத்தின் லேப்டாப் மற்றும் கணினியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக‌ ஹேக்கர்ஸ் எளிதில் உள்நுழைந்து , இணைய தாக்குதலை நடத்த வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் "டெல்"  லேப்டாப்களில் பயன்படுத்தும் ஒரு வகை மென்பொருளில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும் , அதன் மூலம் ஹேக்கர்ஸ் முன்னதாகவே நுழைந்து தங்கள் வேலையை தொடங்கியிருக்கலாம் என்றும், எனவே விரைவில் டெல் வாடிக்கையாளர்களின் லேப்டாப் ஹேக்கர்ஸ்  முடக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொதுவாக லேப்டாப் மற்றும் கணினியில்  ட்ரைவர் மாடியுள்   இருக்கும், . அதேபோல டெல் லேப்டாப் மற்றும் கணினியில் உள்ள‌ DRIVER  இல் 5 இடங்களில் பாதிப்புகள் உள்ளதாக  சைபர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம்  டெல் பயனாளரின் அனுமதியின்றி ஹேக்கர்ஸ் சர்வரின் அனுமதியை பெற்று, உள்நுழைய முடியும். 


கடந்த 2015-ஆம் ஆண்டு முதலே இது போன்ற பாதுகாப்பு குறைபாடுக‌ள் டெல் லேப்டாப்பில் இருந்து கண்டறியப்பட்டது, இதன் மூலம் ஆயிரக்கான பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் கடந்த 2019-ஆம் ஆண்டும் இதே போன்ற பாதுகாப்பு பிரச்சனையில் டெல் சிக்கியது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய கால அவகாசம் வேண்டும் என்பதால், வியாபாரம் தடைபடும் என்பதற்காக இதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட டெல் நிறுவனம் தயங்கியதாக தெரிகிறது. இந்நிலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து பிரச்சனைக்கான தீர்வு குறித்த வழிமுறைகளை டெல் வெளியிட்டுள்ளது. இதன் மூலம்  ஹேக்கர் ஊடுருவலை தடுக்க முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த அப்டேட்டானது பிரீ இன்ஸ்டால் செய்ய இயலாது.யாரெல்லாம் BIOS ,THUNDERBOLT,TPM போன்றவற்றிற்கு பதிவு செய்திருந்தார்களோ அவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ஹேக்கர்ஸிடம் இருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகளை டெல் வழங்கியிருந்தாலும், இப்போது வெளியாகியிருக்கும் இந்த செய்தி டெல் பயனாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் டெல் நிறுவத்தின் அனைத்து லேப்டாப் மற்றும் கணினியில் நிச்சயம் குறைபாடு இல்லாவிட்டாலும் லட்சக்கணக்கான பயனாளர்கள் இதன் மூலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே அனைவரும் டெல் வெளியிட்டுள்ள புதிய மாடியுளை பேட்ச் செய்வதுதான் ஒரே தீர்வு என டெல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.