பிரபல apple நிறுவனம் தனது அடுத்த படைப்பான iphone 13, iphone 13 mini, iphone 13 pro, iphone 13 pro max  உள்ளிட்ட வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அடிப்படை மாடல்களாக பார்க்கப்படும் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினிக்கும்  முந்தைய மாடலான ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினிக்கும் உள்ள வேறுபாடுகள் மற்றும் மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்.




iphone 12 and iphone 12 mini  VS  iphone 13 and  iphone 13 mini


அளவு :


கடந்த 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட  ஐபோன் 12 - இன் நீளம்  5.78 இன்ச் மற்றும் அகலம் 2.82 இன்ச் ஆக இருந்தது.  அதே போல ஐபோன் 12 மினியின் நீளம்  5.18 இன்ச்  மற்றும் 2.52 இன்ச் அகலமாக இருந்தது.தவிர இரண்டு மாடல்களின் தடிமனும் 0.29 அங்குலமாக இருந்தது. 


தற்போது அறிமுகமாகியுள்ள ஐபோன் 13 ஆனது ஐபோன் 12 ஐ ஒப்பிடும் பொழுது நீளம் மற்றும் அகலங்களில் மாற்றம் ஏதும் இல்லை ஆனால் 0.01 அளவு தடிமன் மாற்றம் கண்டுள்ளது.


எடையை பொருத்தவரையில் ஐபோன் 12-ஐ விட ஐபோன் 13 அதிக எடைக்கொண்டது. 




திரை :


iphone 12 மற்றும் iphone 12 mini  இரண்டுமே  ரெடினா எக்ஸ்.டி.ஆர்( Retina XDR ) டிஸ்ப்ளேக்களை கொண்டிருந்தன. OLED திரை , HDR சப்போர்ட்டும் இருந்தது. இவை இரண்டின் அதிகபட்ச ஒளிர்வுரும் தன்மை( brightness ) 625 nits இல் இருந்து 1,200 nits ஆக இருந்தது. ரெசலியூசனை பொருத்தவரையில் ஐபோன் 12 ஆனது ஐபோன் 12 மினியை விட அதிக அளவு கொண்டிருந்தது. (iphone 12  ஆனது  2532  ×1170 பிக்சல் அளவிலும் iphone 12 mini ஆனது  2340  ×1080 அளவிலும் இருந்தது)



iphone 13 ஐ பொருத்தவரையில் திரை வடிவமைப்புகள் iphone 12 போலவே உள்ளன. ஆனால் ஒளிரும் அளவு ஐபோன் 13 -இல் அதிகரிக்கப்பட்டுள்ளது. 800 nits இல் இருந்து 1,200 nits ஆக உயர்த்தியுள்ளனர். இது ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி இரண்டிற்குமே பொருந்தும். இது தவிர TrueDepth  சென்சாரில் சிறிய மாற்றங்களை செய்துள்ளதாக apple நிறுவனம் தெரிவித்துள்ளது.



கேமரா: 


ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி  இரண்டையும் ஒப்பிடும் பொழுது கேமரா பிக்சல் குவாலிட்டியில் மாற்றம் ஏதும் இல்லை. ஆனால் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினியில் நிறைய மென்பொருள் மாற்றங்களை Apple நிறுவனம் புகுத்தியுள்ளார்கள். குறிப்பாக முந்தையை ஐபோன் மாடல்களில் இல்லாத அளவிற்கு 20 சதவிகிதம் குறைவான சிறிய துளை(notch)கேமாராவை செல்ஃபி கேமராவக வடிவமைத்துள்ளனர். இது ஒரு true depth கேமரா என்பது குறிப்பிடத்தக்கது.TrueDepth கேமரா 4k வீடியோவை 60fps வரை பதிவு செய்ய முடியும் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினியில் HDR 3 வசதி கொடுக்கப்பட்டிருந்தது. ஐபோன் 13  மற்றும் ஐபோன் 13 மினி மாடல்களில்  HDR 4 மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் support sensor-shift optical image stabilization சார்ந்து இயங்குவதால் சினிமாட்டிக் வசதி என்ற புதிய வசதி ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினியில் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர ஸ்லோ- மோஷன் வீடியோ,வீடியோ ரெக்காடிங் போன்றவற்றிலும் பல வசதிகள் புகுத்தப்பட்டுள்ளன.





செயல்திறன் :


apple நிறுவனம் ஒவ்வொரு முறையும் தனது புதிய மாடல் மொபைல்போன்களை சந்தைப்படுத்தும் பொழுது பவர் சிப்பின் தரத்தை உயர்த்துவது வழக்கம் அந்த வகையில் ஐபோன் 12 மற்றும் 12 மினியில் கொடுக்கப்பட்டிருந்த A14 Bionic பவர் சிப்பிலிருந்து A15 Bionic பவர் சிப்பிற்கு மாறியுள்ளது.இதனால் ஐபோன் 13 மற்றும் 13 மினியின் செயல்திறன் அதிவேகமாக இருக்கும். வரைகலையில் இது பெரிதும் உதவியாக இருக்கும் என apple நிறுவனம் தெரிவித்துள்ளது. 30 % அளவில் கிராஃபிக்கல் செயல்பாடுகளில் பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




5G தொழில்நுட்பம் :


ஐபோன் 12 மற்றும் 12 மினியானது 5G தொழில்நுட்பம் கொண்ட முதல் தலைமுறை ஐபோன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொலைதூர இணைப்பு, அதிக செல்லுலார் வேகம் என 5G  சேவை ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினியில் அசத்தினாலும் எல்லா இடங்களிலும் இவை கிடைக்கவில்லை. அனால் தற்போது  ஐபோன் 13 மற்றும் 13 மினியில் “5G பேண்டுகளை” கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது ஆப்பிள் நிறுவனம். இதன் மூலம் நாட்டின் பல இடங்களில் 5ஜி சேவையை பயன்படுத்த முடியும் என குறிப்பிட்டுய்ள்ளது. 


iphone 12 மற்றும் iphone 12 mini-இன் esim வசதி அமெரிக்க மாடல்களில் வழங்கப்படவில்லை.ஆனால் iphone 13 iphone 13 mini esim  வசதியை ஆதரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 



பேட்டரி :


iphone 12 மற்றும் iphone 12 mini  20W அடாப்டர் மற்றும் லைட்னிங்கைப் பயன்படுத்தும் போது, 50% சார்ஜிங்கை 20 நிமிடங்களில் அடையச் செய்தது. ஆனால் அவை  MagSafe  சப்போட்டுடன் வெளியிடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி MagSafe சப்போர்ட் சார்ஜருடன் அறிமுகமாகியுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இவை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம்  ஐபோன் 12 ஐ விட மிக விரைவான சார்ஜிங் வசதி கிடைக்கும் என்கிறது ஆப்பிள்.


ஐபோன் 13 சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆப்பிள் கூறுகிறது மேலும் அதன் பேக்கேஜிங் இனிமேல் பிளாஸ்டிக் கவர்கள் கொண்டு செய்யப்பட்டிருக்காது என தெரிவித்துள்ளது. இதன் மூலம் 600 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் வீணாவதை தடுக்க முடியும் என்கிறது ஆப்பிள்.




நிறம்  மற்றும் விலை:


ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி மூன்று  சேமிப்பு திறன்களின் கிடைக்கின்றன அவை 64GB, 128GB மற்றும் 256GB. ஆனால் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினியானது 128GB, 256GB மற்றும் 512GB என்ற வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.குறைந்தபட்ச சேமிப்பு திறனான  64GB ஐ நீக்கிவிட்டு  512GB அளவில் உள்ளீட்டு சேமிப்பு திறன அளவை அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக ஐபோன் புரோ மேக்ஸில்  1 டெரா பைட் அளவிற்கு சேமிப்பு திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.


ஐபோன் 13 பொருத்தவரை 128ஜிபி மாடல் ரூ.79,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. 256ஜிபி மாடல் ரூ.89,999 க்கும், 512 ஜிபி மாடல் ரூ.1,09,900க்கும் விற்பனையாகவுள்ளது. ஐபோன் 13 மினி 128 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.69,999க்கு விற்பனையாகவுள்ளது.  256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ. 79,999க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.99,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது இந்த மாடல்கள் இரண்டுமே பிங்க், ப்ளூ, மிட்நைட், ஸ்டார்லைட்,  சிவப்பு உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கும்.