ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் எந்த அப்ளிகேஷன் குறித்துப் பதிவிட்டாலும் அதற்கடுத்த நிமிடமே அது பல மில்லியன் கணக்கில் டவுன்லோட் செய்யப்படும் என்பதை உறுதியாகச் சொல்லலாம். வாட்சப் தனிப்பயன் குறித்த சர்ச்சை எழுந்தபோது எலான் மஸ்க்தான் மக்களுக்கு ’சிக்னல்’ ஆப்பை அறிமுகப்படுத்தினார். அந்த வரிசையில் அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிமுகப்படுத்திய ஆப்தான் க்ள்ப்ஹவுஸ். அவர் அதுகுறித்து ட்வீட் செய்த அடுத்த நாளே சுமார் 8 மில்லியன் டவுன்லோட்களைச் சந்தித்தது அந்த அப்ளிகேஷன். இருந்தும் ஆப்பிள் ஃபோன் உபயோகிப்பவர்களுக்கு மட்டுமே இந்த அப்ளிகேஷன் என்பது ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.
மார்ச் 2020 இது சர்வதேச அளவில் ஆப்பிள் ஐ.ஓ.எஸ்.களில் மட்டும் லாஞ்ச் செய்யப்பட்டது. ஏற்கனவே இந்த அப்ளிகேஷனை உபயோகிக்கும் ஒருவர் அழைப்பதன் வழியாக அல்லது காத்திருந்தோ இதில் நமது கணக்கைத் தொடங்கலாம்.
இந்த நிலையில்தான் தற்போது இந்திய ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்காக கிளப்ஹவுஸ் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது இதன் நிறுவனமான ’ஆல்ஃபா எக்ஸ்ப்ளோரேஷன்’. இதை ஆண்ட்ராய்ட் 8.0 வெர்ஷன் உள்ள மொபைல் ஃபோன்களில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆண்ட்ராய்ட்டில் இயங்கினாலும் தொடக்கநிலை என்பதால் ஏற்கெனவே கிளப்ஹவுஸ் உபயோகிக்கும் பயனாளர்கள் அழைப்பின் வழியாக மட்டுமே இதில் கணக்கு தொடங்கலாம். அதன் வரை வெறுமனே தரவிறக்கு உங்கள் கணக்குக்காக முன்பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம். கிளப்ஹவுஸின் வளர்ச்சியைக் கணக்கிட ஏதுவாகவே இந்த அழைப்பின் வழியான உபயோகம் இருக்கும், இருப்பினும் எதிர்காலத்தில் லட்சக்கணக்கான பயனாளர்களை இணைப்பதே தங்கள் நோக்கம், மேலும் மொழிவாரியாக விரிவடையும் திட்டமும் எதிர்காலச் செயல்பாட்டில் இருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தனது ப்ளாக்கில் குறிப்பிட்டிருந்தார்.