என்னதான் நாம் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேறிக்கொண்டிருந்தாலும் கூட ,  விண்வெளியில் அவ்வபோது நடக்கும் சம்பவங்கள் நாம் தனித்து விடப்பட்டிருக்கிறோமோ ? அல்லது இன்னும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆரம்பநிலையில்தான் இருக்கிறோமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடுகிறது. 


நாசா பகிர்ந்த புகைப்படம் :


விண்வெளியில் அவ்வபோது நடக்கும் மாற்றங்களை நாசா தனது சமூக வலைத்தள பக்கங்களின் வாயிலாக பகிர்ந்து வருகிறது. பார்ப்பதற்கு வெறும் புள்ளிகளாகவும் , ஏதோ லைட் வெளிச்சம் போலவும் இருப்பதால் அதனை எளிதாக கடந்துவிடுகிறோம். ஆனால் சூரிய குடும்பத்தில் இருந்து பல மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் நடக்கும் இத்தகைய நிகழ்வுகள் உண்மையில் எதிர்பார்ப்பையும் , நாம் உணராத நிறைய அறிவியல் இருக்கிறது என்பதைதான் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அப்படிதான் சமீபத்தில் நாசா பகிர்ந்த புகைப்படம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 






கருந்துளையில் மாற்றம் :


சூரிய குடும்பத்தில் இருந்து 3 முதல் 30 மில்லியன் அளவில் உள்ள black holes  எனப்படும் கருந்துளை ஒன்று  பிரகாசமாக மற்றவற்றை காட்டிலும் மெதுவாக‌ சுழன்றுக்கொண்டிருக்கிறது. அது தன்னை சுற்றியிருக்கும் ஏதோ ஒன்றுடன் தொடர்புக்கொள்கிறது என நாசா தெரிவித்துள்ளது.


காரணம் என்ன?


விண்வெளியில் H1821+643 என்ற ஒரு ஏரியா உள்ளது. இது  பூமியில் இருந்து சுமார் 3.4 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய கருந்துளையால் இயக்கப்படும் ஒரு குவாசர் ஆகும். H1821+643 இல் உள்ள  அந்த கருந்துளையின் சுழற்சியை தீர்மானிக்க நாசாவின் சந்திரா எக்ஸ்ரே ஆய்வகத்தை விஞ்ஞானிகள் பயன்படுத்தியுள்ளனர். ஆய்வின் அடிப்படையில் மிகப் பெரிய கருந்துளைகள் மற்ற கருந்துளைகளுடன் இணைவதன் மூலம் அல்லது அவற்றின் பெரிய வட்டுகள் சீர்குலைக்கப்படும்போது வாயு சீரற்ற திசைகளில் உள்நோக்கி இழுக்கப்படுவதன் மூலம் இப்படியான மாற்றங்களை சந்தித்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண