பணம் டெபாசிட் செய்யும் மெசின்களில் யு.பி.ஐ. பயன்படுத்தி டெபாசிட் செய்யும் முறை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 


இரண்டு மாதத்துக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிநிலை கொள்கை கூட்டம் நடைபெறும். அதன்படி,  இன்று (05/04/2024) நடைபெற்ற நிதிநிலை கொள்கை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 


இதில், யு.பி.ஐ. பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யும் மெசின்களில் (Cash Deposit Machines (CDMs)) டெபிட் கார்ட் பயன்படுத்தியும், சில வங்கிகளில் டெபிட் கார்டு இல்லாமல் வங்கி கணக்கு எண் பயன்படுத்தியும் பணம் டெபாசிட் செய்யும் முறையும் நடைமுறையில் உள்ளது. 


இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்த தாஸ் குறிப்பிடும் போது,” பணம் டெபாசிட் செய்யும் மெசின்கள் மூலம் பணம் டெபாசிட் செய்யப்படுவதன் மூலம் வங்கி கிளைகளில் அதற்கான வேலை குறைந்துவிடும். மக்கள் பெரும்பாலும் யு.பி.ஐ. பயன்படுத்துவதற்கு பழகிவிட்டனர். கார்ட் இல்லாத பண பரிவர்த்தனையும் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், யு.பி.ஐ. மூலம் பணம் டெபாசிட் செய்வது நடைமுறை செய்வது சிறந்ததாக இருக்கும் என கருதுகிறோம்.” என்று தெரிவித்துள்ளார். 


யு.பி.ஐ. பயன்பாடு - பணம் டெபாசிட்


 வங்கி பணப்பரிமாற்ற முறைகளில் ஒன்றான யு.பி.ஐ. பணம் செலுத்தும் முறையை தேசிய கட்டணக் கூட்டமை (National Payment corporation of India) நிர்வகித்து வருகிறது. இப்போது யு.பி.ஐ. மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்வது அதிகரித்து வருகிறது. 


ஏ.டி.எம்.-களில் பணம் டெபாசிட் செய்யும் மெசின் உள்ளது. இதில் டெபிட் கார்டு பயன்படுத்தி ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து கொள்ளலாம். சில வங்கிகள் கார்டு இல்லாமல் பணம் டெபாசிட் செய்யும் வசதியை வழங்குகிறது. யு.பி.ஐ. மூலம் பணம் டெபாசிட் செய்யும் வசிதி நடைமுறைப்படுத்தப்பட்டால் இனி, டெபிட் கார்ட் தேவைப்படாது. யு.பி,ஐ, ஐ.டி. பயன்படுத்தி பணம் டெபாசிட் செய்யலாம். 


வங்கி வேலை நேரங்களில் மட்டுமே பணம் டெபாசிட் செய்யலாம் என்பதற்கு பதிலாக, வங்கி வேலை நேரம் முடிந்தும் யு.பி.ஐ. பயன்படுத்தி பணம் டெபாசிட் செய்யலாம் என்பது பெரும் வசதியாக இருக்கும். 


டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் யு.பி.ஐ. பயன்பாடு என்பது அதிகமாக உள்ளது. Worldline ரிப்போட் அடிப்படையில், கடந்தாண்டை விட இந்தாண்டு யு.பி.ஐ பயன்பாடு 56% அதிகரித்துள்ளது. 2023-ன் இரண்டாம் பாதியில் 65.77 பில்லியன் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.