யூடியூப் ஷார்ட்ஸ் அம்சம் டேப்லெட் மற்றும் டெஸ்க்டாப் போன்றவைகளிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளக்து.


கூகுள் தனது பயனர்களுக்கு அவ்வபோது அப்டேட்கள் வழங்கி மகிழ்வித்து வருகிறது. இன்ஸ்டாகிராம் (ரீல்ஸ்) மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் முதன்முதலில் ஷார்ட்ஸ் என்ற குறுகிய வீடியோ வடிவம் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், அதற்கு கிடைத்த  வரவேற்பை தொடர்ந்ந்து யூடியூபிலும்  ஷார்ட்ஸ் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது.


இந்நிலையில், ஷார்ட்ச் அம்சத்தை விரைவில் டெஸ்க்டாப் மற்றும் டேப்லெட்டுகளுக்கும் கொண்டுவரப்பட இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  இதனை தற்போது மொபைல் ஃபோன்களில் மட்டுமே அணுக முடியும். டெஸ்க்டாப்கள், டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் போன்ற இயங்குதளங்களில் ஷார்ட்ஸ் வீடியோக்களைப் பார்க்க முடியாது. இப்போது, ​​கூகிள் டெஸ்க்டாப்புகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கு ஏற்ப அப்டேட்டை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த அப்டேட் அடுத்த சில வாரங்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பலர் ஸ்மார்ட்போன்களுக்குப் பதிலாக பெரிய திரைகளில் ஷார்ட்ஸை பார்க்க விரும்புகின்றனர். டெஸ்க்டாப்புகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான யூடியூப் இன்டர்பேஸில் எவ்வாறு ஒழுங்கமைக்கப்படும் என்பதைப் பார்க்க வேண்டும். இது ஸ்மார்ட்போன்களில் இருந்து வேறுபட்டது. மொபைலில் யூடியூப் ஷார்ட்ஸ், அதற்கென்று தனிப்பட்ட பகுதியைக் கொண்டுள்ளது.




ரீமிக்ஸ்


யூடியூப் தனது ஷார்ட்ஸ் இயங்குதளத்தில் ‘கட்’ என்ற புதிய அம்சத்தையும் கொண்டு வருகிறது. இதன்மூலம் உங்கள் சொந்த கிளிப்பில் பிற பயனர்களின் வீடியோக்களின் பகுதிகளைச் சேர்க்க முடியும். டிக்டோக்கில் உள்ள ‘ஸ்டிட்ச்’ அம்சத்தைப் போலவே கட் வேலை செய்யும். அதேநேரத்தில், தங்கள் கிளிப்களை மற்றவர்களின் வீடியோக்களின் ஆடியோவை கொண்டு பயன்படுத்துவதை விரும்பாத யூசர்கள், இந்த அம்சத்திலிருந்து விலகலாம். அதற்கான செட்டிங்ஸூம் கொடுக்கப்படும். இந்த அப்டேட் முதலில் ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கு வர இருக்கிறது. பின்னர், ஆண்ராய்ட் பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


உலக அளவில் யூடியூப் பல கோடி அளவிலான பயனர்களை கொண்டுள்ளது. டிக்டாக் தடைக்கு பின்பு, யூடியூப் ஷார்ட்ஸ் மிகவும் பிரபலமானது. தற்போது, அனைத்து வகையா எலக்ட்ரானிக் டிவைஸ்களிலும் யூடியூப் ஷார்ட்ஸ் பயன்படுத்தப்பட்டால், பார்வையாளர்களின் கண்டன்ட் அதாவது தகவல் நுகர்வில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண