BSNL பைபர் பயனர்களுக்கு கூகுள் நெஸ்ட் மினி  (google nest mini) மற்றும் கூகுள் நெஸ்ட் ஹப்(Google Nest Hub) ஆகியச் சாதனங்களை மிகச்சிறந்த தள்ளுபடி விலையில் இன்று முதல் 90 நாட்களுக்கு இந்நிறுவனம் வழங்குகிறது.

Continues below advertisement

இந்திய அரசால் நடத்தப்படும் பிஎஸ்என்எல் சேவை சமீபகாலங்களாக பல்வேறு சலுகைகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகிறது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் கூகுள் பண்டல் சலுகையினை மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தச் சலுகையின் கீழ், BSNL பாரத் பைபர் பயனர்களுக்கு கூகுள் நெஸ்ட் மினி மற்றும் கூகுள் நெஸ்ட் ஹப் ஆகிய சாதனங்களை மிகச்சிறந்த தள்ளுபடி விலையில் வழங்குகிறது. அதன் படி இந்த சலுகை இன்று ( ஜூலை 16) முதல் 90  நாள்களுக்கு பிஎஸ்என்எல் பைபர் சந்தாரர்கள் ரூ. 99 மற்றும் ரூ. 199 செலுத்திப்பெற்றுக்காள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு பல்வேறு நிபந்தனைகளும் தற்பொழுது விதித்துள்ளது.

பி.எஸ்.என்.எல் தற்பொழுது அறிவித்துள்ள கூகுள் பண்டல் சலுகையினைப்பெற வேண்டும் என்றால், பயனர்கள் ரூ. 799 அல்லது அதற்கு மேற்பட்ட பிராட்பேண்ட் திட்டத்தினைப்பெற்றிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்தச் சலுகையைப்பெற வேண்டும் எனில் சந்தாவின் முழுத்தொகையினையும் ஒரே தவணையில் பயனர்கள் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியான சந்தாதாரர்கள் பி.எஸ்.என்.எல் (BSNL) ஆன்லைன் போர்ட்டல் மூலம் வருடாந்திர, இரு ஆண்டு, மூன்று ஆண்டு திட்ட சந்தா கட்டணங்களை செலுத்தி, BSNL ஆன்லைன் தளத்தின் மூலம் பண்டலின் உறுப்பினராகலாம். Annual, biennial, triennial பிராட்பேண்ட் திட்டங்களுக்கு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ஒரு முறை கட்டணமாக 10.5 மாதங்கள், 20.5 மாதங்கள் மற்றும் 30.5 மாதங்களுக்கு என்றவாறு கட்டணங்களை செலுத்தலாம். 

Continues below advertisement

இதன் மூலம் கூகுள் நெஸ்ட் மினி மற்றும் கூகுள் நெஸ்ட ஹப் சாதனங்களை  சலுகை விலையில் பெறமுடியும். குறிப்பாக கூகுள் நெஸ்ட் மினியின் விலை ரூ.4999 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. தற்பொழுது முறையான சந்தாவினை செலுத்தி பி.எஸ்.என்.எல் பாரத் பைபர் திட்டங்களுடன், 13 மாதங்களுக்கு சந்தா வாக ரூ. 99  செலுத்தும் பொழுது இதன் விலை ரூ. 1287 க்கு நாம் பெற்று விடமுடியும். 12 மாதங்களுக்கு பிஎஸ்என்எல் பிராட்பேன்ட் திட்டத்தின் உறுப்பினராக இருக்க விரும்புபவர்களுக்கு கூகுள் நெஸ்ட் மினியின் விலை ரூ. 1188 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கூகுள் நெஸ்ட் ஹப்புக்கான சலுகை:

கூகுள் நெஸ்ட் ஹப்பைப் பெற, நீங்கள் 9999 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டங்களுடன், நெஸ்ட் ஹப்பின் விலை ரூ .2587 ஆக உள்ளது. பயனர் ரூ .799 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்தை 13 மாதங்களுக்கு எடுத்துக் கொண்டால் மட்டுமே இது சாத்தியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பயனர் 12 மாதங்களுக்கு பிராட்பேண்ட் திட்டத்தை எடுத்தால், அவர் ஒவ்வொரு மாதமும் 199 ரூபாய் செலுத்த வேண்டும். இதில் நெஸ்ட் ஹப்பின் விலை ரூ .2388 ஆக உள்ளது.